தனிப்பிரிவு காவலரிடம் ரூ.80,000 நூதன மோசடி

Admin

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி தனிப்பிரிவு காவலரிடம் ரூ.80,000 நூதன மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவர் கூட கோவில் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் திருமங்கலத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது ஏடிஎம் சரியாக இயங்காததால் அவர் பின்னால் நின்ற மர்ம நபர் ஒருவர் தான் பணம் எடுத்து தருவதாக கூறியுள்ளார் இதையடுத்து அந்த நபர் தனிப்பிரிவு காவலரிடம் ஏடிஎம் ரகசிய நம்பரை கேட்டு வாங்கி ரூ.20,000 எடுத்துக் கொடுத்துள்ளார்.
சில நாட்களுக்குப் பின்னர் தனிப்பிரிவு காவலர் செல்லப்பாண்டி ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றபோது அவருடைய ஏடிஎம் கார்டு வேறு ஒருவருடைய கார்டாக இருந்தது.
வங்கியில் சென்று பரிசோதித்த போது அவருடைய கணக்கில் ரூ.80,000த்தை யாரோ எடுத்து இருந்தது தெரியவந்தது.

பின் நம்பரை தெரிந்து கொண்டு காவலர் செல்லப்பாண்டியின் கார்டை வைத்துக்கொண்டு வேறு ஏடிஎம் கார்டை மர்ம நபர் திருப்பி கொடுத்தது தெரியவந்தது .
மேலும் மர்ம நபர் ரூபாய் 80,000த்தை நூதனமாக திருடியது தெரியவந்தது. இதையடுத்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் செல்லப்பாண்டி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

இன்றைய கோவை கிரைம்ஸ்

270 குப்பையை அகற்ற கூறியவருக்கு அடிஉதை மூவரிடம் விசாரணை பாப்பநாயக்கன் பாளையம் பரமேஸ்வரன் பிள்ளை லே-அவுட் பகுதியைச் சேர்ந்த மாரப்பன் என்பவரின் மகன் ஆனந்தராஜ். இவரது வீட்டின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452