செல்போனை பறித்துச் சென்ற 4 நபர்கள் மாதவரம் காவல்துறையினரால் கைது

Admin

சென்னை : சென்னை கொடுங்கையூர், பகுதியைச் சேர்ந்த ஐயப்பன், வ/22, என்பவரும் மாதவரத்தைச் சேர்ந்த மோனீஷ், வ/20 என்பவரும் முகநூலில் நண்பர்களாகி, இருவரும் 21.01.2021 அன்று சந்திப்பதாக முடிவெடுத்தனர்., மோனீஷின் நண்பர் விஜய்குமார், இருசக்கர வாகனத்தில் சென்று ஐயப்பனை ஏற்றிக் கொண்டு, மாதவரம் அலெக்ஸ் நகர் மைதானத்திற்கு வந்தபோது,. மோனீஸ் மற்றும் 2 நபர்களும், கத்தியை காட்டி ஐயப்பனை மிரட்டி அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றது தொடர்பாக ஐயப்பன், M-1 மாதவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், வழக்குப் பதிவு செய்து. M-1 மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட 1.மோனீஷ், வ/20, மாதவரம், 2.விஜய்குமார், வ/23, கொடுங்கையூர், 3.தமிழ்செல்வன், வ/22, மாதவரம், 4.தினேஷ், வ/23, , மாதவரம் ஆகிய 4 நபர்களை 26.01.2021 அன்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் 1 செல்போன், குற்றச் செயலுக்கு பயன்படுத்திய யமஹா FZ இருசக்கர வாகனம் மற்றும் 1 கத்தி கைப்பற்றப்பட்டது.அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சாஹித் உசேன்
மாநில தலைவர்
இளம் குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா


Leave a Reply

Your email address will not be published.

Next Post

ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை

601 மதுரை : மதுரை நெல்பேட்டையில் ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரைபைகாரா முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452