சென்னை முக்கிய கிரைம்ஸ் 21/03/2021

Admin

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS ” தொடர்ச்சியாக, P – 6 கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின்பேரில் 19.03.2021 அன்று மாலை கொருக்குப்பேட்டை , எழில் நகர் பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்த போது , அங்கு நின்று கொண்டிருந்த பெண்ணை விசாரணை செய்து, அவர் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்த போது , அதில் மெத்த கெட்டமைன் போதை பொருள் வைத்திருந்த பாத்திமா , வ / 44 , தண்டையார்பேட்டை என்பவரை கைது செய்தனர். விசாரணையில் பாத்திமா அளித்த தகவலின் பேரில் மேற்படி வழக்கில் தொடர்புடைய அயாத்துல்லா , வ / 31 தண்டையார்பேட்டை என்பவரையும் கைது செய்தனர் . அவர்களிடமிருந்து ரூ .5 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ மெத்த கெட்டமைன் போதை பொருள் கைப்பற்றப்பட்டு, அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்ட்டது.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மதுரை முக்கிய கிரைம்ஸ் 22/03/2021

786 திருட்டு குற்றம் சுமத்தப்பட்ட ஒர்க்ஷாப் ஊழியர் மர்ம சாவு போலீசார் விசாரணை மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் திருட்டு குற்றம் சுமத்தப்பட்ட ஒர்க்ஷாப் ஊழியர் மர்ம சாவு தொடர்பாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452