சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம்

Admin
சென்னை : இன்று 20.02.2021, சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் திரு.கோதண்டராஜ் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., ஆகியோரின் தலைமையில் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில், காவல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற நடுவர்கள், அரசு வழக்குரைஞர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள், நீதிமன்ற நடுவர்கள், அரசு தரப்பு வழக்குரைஞர்கள், கலந்து கொண்டு, நீதிமன்ற விசாரணையிலுள்ள வழக்குகளில் உரிய முன்னேற்றம் காணவும், உரிய தொடர்ச்சியான நடைமுறைகள் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவும், நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து விவர ஆய்வும், காரணங்கள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் காவல் அதிகாரிகள் மற்றும் சென்னை பெருநகர நீதிமன்ற நடுவர்கள், அரசு வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.

சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டதால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான வைக்கோல் படப்பு தப்பியது

999 விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சேத்தூர் காவல் நிலையம் பின்புறம் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வைக்கோல் படப்புகள் வைக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்காகவும் கால்நடை தீவனத்திற்காகவும் கேரளா […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452