சீர்மிகு சீர்காழியில் தேர்தல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் வீரர்களின் கொடி அணிவகுப்பு

Admin
மயிலாடுதுறை : சட்டமன்ற தேர்தல் 2021 பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் பொருட்டு ITBP (Indo-Tibetan Border Police) வீரர்கள் நமது மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர் அவர்களுடன் சீர்காழி உட்கோட்ட துணை காவல்கண்காணிப்பாளர், மயிலாடுதுறை பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள், சிறப்பு காவல் படை, தாலுக்கா காவல் நிலைய காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், இதர காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் என 110 பேர் கலந்து கொண்டு பிரம்மாண்ட கொடி அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு. ஸ்ரீநாதா இகாப அவர்களின் உத்தரவுப்படி சிறப்பாக நடத்தி முடித்தனர்.
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள், கலவரங்கள், சமூக விரோத செயல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த காவல்துறை எந்த நேரமும் விழிப்புடன் செயல்படுவதையும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் இக்கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா


Leave a Reply

Your email address will not be published.

Next Post

திருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதி சுற்றுவட்டார பகுதிகளில் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகள் தீவிரம

832 மதுரை : தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் முழுவதும் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452