சிவகிரி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.

Prakash

சிவகிரி : சிவகிரி வனச்சரகம் தேவியாறு பகுதியில் மஞ்சக் கேணி அருவி உள்ளது. இந்த வனப்பகுதிக்குள் யாரும் செல்லக்கூடாது என்று வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இந்தநிலையில் சிவகிரி வனத்துறை ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் வனத்துறையினர் ராஜுஇ திருவேட்டைஇ அருண்குமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மஞ்சக் கேணி அருவி உள்ள வனப்பகுதிக்குள் இரண்டு வாலிபர்கள் நுழைந்து குளித்துக் கொண்டிருந்தனர் பின்னர் அவர்கள் வனப்பகுதியில் செல்போன் வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
இதைப்பார்த்த வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில்இஅவர்கள் சங்கரன்கோவில் அருகே உள்ள இருமன்குளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(24)இ செந்தூர்பாண்டியன்(26) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் 2 வாலிபர்களுக்கும் தலா ரூ.1 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தேனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச முக கவசங்களை வழங்கினார்

326 தேனியில் :  தமிழகத்தில் கொரானா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அரசு சார்பாக முக கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452