சிறுமியிடம் சில்மிசம் செய்தவனுக்கு தக்க பாடம் புகட்டிய நாமக்கல் SP சக்தி கணேஷ்

Admin

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர்இ தன்னுடைய மகளுக்கு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க ஆண்ட்ராய்ட் மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளார். இந்த பெண்ணுக்கு ஒரு மகனும் உள்ளார்.

தாயும், அண்ணனும் வேலைக்கு சென்று விட, வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, சமூக வலைதளங்கள் போன்வற்றில் மாணவி தன் பெயரில் பக்கங்களை ஏற்படுத்தி தன்னுடைய புகைப்படம், குடும்ப புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். இதற்கிடையே, மாணவியின் தாயின் வாட்ஸ் – அப் வாய்ஸ் மெசேஜில் மாணவியை கொச்சையான வார்த்தைகளால் திட்டி சிறுமியின் நிர்வாண போட்டோவை ஒருவன் அனுப்பி வைத்துள்ளான். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் இது குறித்து மாணவியிடத்தில் விசாரித்துள்ளார்.

அப்போது, தாயிடத்தில் மாணவி அழுதபடி கூறிய தகவல்கள் அதிர்ச்சி ரகமாக இருந்தது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா விழுப்பனூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவனுடன் பேஸ்புக்கில் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவன், சிவகாசி மாவட்டம் அனுப்பன்குளத்தில் மின்சார வாரியத்தில் பணி புரிகின்றான். முதலில் அண்ணன் போல பழகிய தமிழ்செல்வன் நாளடைவில் மாணவியை காதலிப்பதாக கூறயிருக்கிறான். காலபோக்கில் அவனை முழுமையாக நம்பிய மாணவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தின் பாஸ்வோர்டுகளை கொடுத்துள்ளார்.

பின்னர், ஒரே ஒருமுறை நான் உன்னை நான் நிர்வாணமாக பார்க்க வேண்டுமென்று கூறி மாணவியை தமிழ்செல்வன் கட்டாயப்படுத்தியுள்ளான். விவரம் அறியாத மாணவியும் வீடியோகாலில் தமிழ்செல்வன் கூறியபடி பேசியுள்ளார். இதை, தமிழ்ச்செல்வன் ரிக்கார்ட் செய்துள்ளான். பின்னர்இஅந்த படங்களை காட்டியே மிரட்டி மாணவியை பல முறை சீரழித்துள்ளான். ஒரு கட்டத்தில், ‘ நீ என்னிடத்தில் நடந்தது போலத்தான் மற்ற ஆண்களிடமும் நடந்து கொள்வாய்’ என்று மாணவியை துன்புறுத்தியுள்ளான். உன்னுடைய அழகை என் நண்பர்களுக்கு ரசிக்கட்டும் என்று கூறி தன் நண்பர்களுக்கும், சிறுமியின் தாய்க்கும் மாணவியின் நிர்வாண புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளான்.

அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் தமிழ்செல்வனை தொடர்பு கொண்டு, ‘என் மகளை விட்டு விடு’ என்று கெஞ்சியுள்ளார். அப்போதுஇ ‘நீயும் நிர்வாணமாக வீடியோ கால் பேச வேண்டும்’ என்று தமிழ் செல்வன் மிரட்டியுள்ளான். இதனால், பயந்து போன சிறுமியின் தாயும், மகனும் ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்துஇ நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசை நேரில் சந்தித்து தாயும், மகளும், மகனும் கண்ணீர் மல்க முறையிட்டனர்.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேஷ், மாணவியின் இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் பக்கங்களை ஆராய்ந்தார். அப்போது, மாணவிக்கு நடந்த கொடுமைகள் பற்றி தெரிந்து கொண்டார். உடனடியாக, தனிப்படை அமைத்து அன்றிரவே தமிழ் செல்வனை தூக்கினர்.

தமிழ்செல்வனிடத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் சக்திகணேஷ் நேரடியாக விசாரித்தார். அப்போது, காவல்துறை கண்காணிப்பளரிடத்திலேயே தெனாவட்டாக பேசிய தமிழ் செல்வன், ‘ உன்னால் முடிந்ததை பார் ‘ என்று திமிர் காட்டியுள்ளான். இதனால், கடுப்பான காவல்துறை கண்காணிப்பாளர் தன் அலுவலகத்தில் வைத்தே அவனை 2 மணி நேரம் விசேஷமாக கவனித்து தமிழ்செல்வனின் திமிரை அடக்கியுள்ளார்.

பின்னர், ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலை ஆய்வாளர் இந்திராவிடம் சக்தி கணேஷ் வழக்கை ஒப்படைத்தார். ஆனால், மகளிர் போலீஸார், விசாரணை என்ற பெயரில் அந்த மாணவியை தகாத வார்தைகளால் திட்டி தீர்த்துள்ளனர். போலீஸாரின் துன்புறுத்தல் குறித்து மாணவி அழுதபடியேதாயிடம் கூறவே, ‘ எங்களுக்கு வழக்கே வேண்டாம்; ஆளை விடுங்கள்’ என்று காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷிடத்தில் போனில் அழுதுள்ளனர்.

இதனால், கோபமடைந்த காவல் கண்காணிப்பாளர் ராசிபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இந்திராவை கடிந்து கொண்டார். தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஏ.டி.எஸ்.பி, காவல் கண்காணிப்பாளரின் நேரடி உதவியாளர் ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்துக்கு சென்றனர். இதையடுத்து, 30 நிமிடங்களில் தமிழ் செல்வன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. தற்போது, தமிழ்செல்வன் ராசிபுரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

பெற்றோர்களை குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புக்கு போன் வாங்கிக் கொடுப்பதோடு விட்டு விடாமல்,அவர்கள் அந்த செல்போனை முறையாக பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிப்பதே அவர்கள் எதிர் காலத்திற்கு உகந்தது.


நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கோவையில் செல்போனில் மெசேஜ் கொடுத்து கஞ்சா விற்றவர் கைது

447 கோவை : கோவை செல்வபுரம் சப் இன்ஸ்பெக்டர் சின்னதுரை நேற்று இரவு சொக்கம்புதூர் ரோட்டில் ரோந்து வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த  ஒருவரை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452