சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு சிறைத்தண்டனையும் ரூ.45,000/- அபராதமும் பெற்றுத்தந்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்

Admin

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018- ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 18.01.2021 ஆம் தேதி அன்று மாண்புமிகு மகிளா நீதிமன்றத்தினால் வழக்கின் குற்றவாளிக்கு முன்று பிரிவுகளின் கீழும், மூன்று எண்ணிக்கைகளின் கீழும் தலா 7 வருடங்கள் என 49 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், அபராத தொகை ரூ. 45,000/- மற்றும் 2 வது குற்றவாளிக்கு 1 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் அபராத தொகை ரூ.5000/- விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நிவாரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ ,200,000/- அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.மேலும் 1,50,000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது .மேலும் இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல் ஆய்வாளர் திருமதி.செல்வி அவர்கள் மற்றும் நீதிமன்ற பணிக்காவலர் ஆகிய இருவரையும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்கள் வெகுவாக பாராட்டினர்கள்.


திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு வந்தவாசியில் விழிப்புணர்வு

1,002 திருவண்ணாமலை : வந்தவாசியில் சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு 19.01.2021 செவ்வாய் கிழமை காலை வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் வந்தவாசி உட்கோட்டம் காவல் துறை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452