கோவையில் பைக்கில் சென்ற வியாபாரியிடம் ரூ 4 லட்சம் பறிமுதல்

Admin

கோவை: தமிழ்நாட்டில் வருகிற 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவது தடுக்க ஒரு சட்டமன்ற தொகுதிக்கு மூன்று பறக்கும்படை வீதம் 10 சட்டமன்ற தொகுதிக்கும் 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் இரவு பகலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் கோவை சங்க னூரில் நேற்று இரவு  வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரும்பு வியாபாரி சக்திவேல் என்பவரது  பைக்கை சோதனை செய்தனர்.

அவரிடம் ரூ 40லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரும்பு வியாபாரத்தில் கிடைத்த பணத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்வதாக கூறினார். அதிகாரிகள் அந்த பணத்துக்கான ஆவணங்களை அவரிடம்  கேட்டனர். அவரிடம் ஆவணங்கள்  எதுவும் இல்லை.  கொடுக்க முடியவில்லை’ இதையடுத்து அவரிடம் இருந்த ரூ 4 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் கோவை வடக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி முருகேசனிடம்  ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து பறக்கும் படை அதிகாரிகள் கூறியதாவது வியாபாரிகள் உள்பட பொதுமக்கள் ரூ 50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்லும் போது அதற்கான ஆவணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு சென்றால்  பறிமுதல் செய்யப்படும் என்றனர்.


கோவையிலிருந்து  நமது நிருபர்

A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

திருட்டு, குற்றச் சம்பவங்கள் குறைவு, கண்காணிப்பு தொடர பொதுமக்கள் எதிர்பார்ப்பு

441 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் போலீசார் மற்றும் பறக்கும் படை சோதனையில் குற்றங்கள் குறைவதால் தேர்தலுக்கு பின்பும் இதேபோல தொடர் கண்காணிப்பு இருக்க வேண்டும் என பொதுமக்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452