கோவை : தமிழ்நாடு சட்டசபை தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை 3 நாட்கள் மூட அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது .இந்த தடையை மீறி கோவை ரத்தினபுரி, கோவில் மேடு, ஈச்சனாரி, மணியகாரம்பாளையம், கிராஸ்கட் ரோடு, சின்ன வேடம் பட்டி ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடை அருகில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக புதுக்கோட்டை பாஸ்கரன் வயது 42 நல்லாம்பாளையம் பரதன் வயது 34 ஆவுடையார்கோவில் இளையராஜாவயது 38 காந்திபுரம் விஜி வயது 37 போத்தனூர் ஆகாஷ் நாதன் வயது 21 ஆர்எஸ் புரம் மவுளி வயது 20 புதுக்கோட்டை சேகர் வயது 31 கணபதி முனியாண்டி வயது 45 ஆகியோர் கைது செய்ய பட்டனர். இதேபோல கோவை புறநகர் மாவட்டத்தில் மது விற்றதாக பொன்னாச்சியூர் மூர்த்தி வயது 35 ஆனைமலை ஜெகநாதன் வயது 41 மரப்பாலம் செந்தில்குமார் 52 காந்திநகர் ராகுல் வயது 18 பெரியநாயக்கன்பாளையம் சரவணன் வயது 38 மாரிமுத்து வயது 40 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மொத்தம் 310 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்