கொள்ளையடிக்க முயன்ற வடமாநில வாலிபர் கைது

Prakash

கோவை: கோவையை அடுத்த காங்கேயம் பாளையத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம் மையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவில் ஒரு ஆசாமி உள்ளே எந்திரத்தை உடைத்து கொண்டிருந்தான். அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்தது.

உடனே அந்த வங்கியின் மேலாளர் லட்சுமி பிரியா சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் அந்த ஆசாமியை மடக்கிப்பிடித்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீசார் அவனை கைது செய்தனர். விசாரணையில் அவன் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த அகில் 25 என்பது தெரியவந்தது. அவனிடம் விசாரணை நடந்து வருகிறது.


கோவையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை:வாலிபர் கைது

284 கோவை: நேற்று இரவு மர்ம ஆசாமி ஒருவன் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தன். பின்னர் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் 6830 ரூபாயை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!