கொட்டும் மழையிலும் தேசிய தலைவர் அ சார்லஸ் தலைமையில் 1000 பேருக்கு இன்சுவை உணவளித்த போலீஸ் நியூஸ் +

Admin

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமானது உணவு. ஆனால் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும் உணவு சமைக்க பணம் இல்லாமல், பல குடும்பங்கள் வறுமையில் வாழ்கின்றனர்.

பண்டிகை காலத்தில் நல்ல உணவு கிடைக்காதா என்று சாலையில் காத்திருக்கும் சாலையோர மக்கள் ஏராளம்.

மனித செயல்களில் உன்னதமான செயல் தர்மம். அதிலும் ஏழைகளுக்கு உணவளிப்பது இறைவனுக்கு உணவளிப்பதை போன்றதாகும் என்று அனைத்து மதங்களும் கூறுகின்றன. அத்தகைய உன்னதமான செயலை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கம் தொடர்ந்து செய்து வருகிறது.

மும்பை தாராவி பகுதியை பற்றி அறியாத மும்பை தமிழர்கள் இருக்க முடியாது. சென்னையிலும் ஒரு தாராவி உள்ளது. அதன் பெயர் சென்னை பெரம்பலூர் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி நகர். இங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்றாட கூலி வேலை செய்து வறுமையில் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் மக்களுக்கு நல்ல உணவு, உடை, இருப்பிடம் இல்லாமலும், நல்ல வேலை கிடைக்காமலும், அப்பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு, நல்ல கல்வி கிடைக்காமலும், உரிய விழிப்புணர்வு இல்லாமலும் வசித்து வருகின்றனர் .

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் திரு.அ.சார்லஸ் அவர்கள் நேரடியாக அப்பகுதிக்குச் சென்று அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பணியினை கடந்த சில ஆண்டுகளாக செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக நேற்று தேசிய தலைவர் திரு.அ. சார்லஸ் அவர்கள் தலைமையில் ராஜீவ் காந்தி நகர் பகுதியில், உள்ள சுமார் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையில் அனைவரும் வீட்டில் இனிப்பு உள்ளிட்ட அறுசுவை உணவு உண்டு, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவர். நேற்று கொட்டும் மழையிலும் போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பாக உணவு வழங்கும் உன்னதப் பணி நடைபெற்றது. உணவினை அப்பகுதி மக்கள் உற்சாகத்துடன் பெற்றுச் சென்ற பசியாறினர்.

இந்நிகழ்ச்சியில் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் வடக்கு மண்டல ஊடக செயலாளர் திரு.முகமது மூசா தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் தேவேந்திரன், பத்திரிக்கை நிருபர் அஜீம், ராஜீவ் காந்தி நகர் பகுதி 71 வது திமுக வட்ட செயலாளர் திரு .புஷ்பராஜ் மற்றும் ஆர்டிஐ சங்கர் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் விக்னேஷ், அப்துல் காதர் ஆகியோர் கலந்துகொண்டு அங்கு கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கினர்.Leave a Reply

Your email address will not be published.

Next Post

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 14 வயது சிறுமி பலாத்காராம்

4,222 சென்னை: சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, காணாமல் போனார், மணலி போலீசில் புகார் கொடுக்கப்பட்டன, பின்னர், அந்த சிறுமி வீடு திரும்பினார், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452