குளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு

Admin

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் காட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன்(18) இவரது நண்பர் பழனிவேல்ராஜன் (20) இருவரும் திருப்பரங்குன்றத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் சரவனபொய்கையில் குளிக்க சென்றுள்ளனர்.

இந்நிலையில் லட்சுமணன் சரவணப் பொய்கை குளத்தில் குளிக்க சென்றார் .

நண்பர் பழனிவேல்ராஜனுக்கு நீச்சல் தெரியாததால் குளத்தில் இறங்காமல் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு குளித்தார்.

அப்போது லட்சுமணன் ஆழமான பகுதிக்குள் சென்றுள்ளார். இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு தண்ணீருக்குள் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இதை கண்ட பழனிவேல்ராஜன் அதிர்ச்சி அடைந்து அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

மேலும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே தொடர்ந்து மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமை தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர்

தொடர்ந்து அரைமணி நேரம் தேடுதலுக்கு லட்சுமணனின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

உடலை பெற்றுக்கொண்ட திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வாலிபரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக திருப்பரங்குன்றம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து உயிர் பலி வாங்கிக் கொண்டிருக்கும் திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் மற்றும் தடுப்பு வேலிகள் அமைத்து யாரும் உள்ளே செல்லாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா??? எதிர்பார்ப்புடன் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

அசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு

793 தேனி : தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பெய்த கன மழையால் ஆடு பாலம் அருகே உயர் அழுத்த மின் வயர் எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்ததையடுத்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452