குற்றத் தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

Admin

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த களம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆரணி காவல் துணை கண்காணிப்பாளர் திரு.கோட்டீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசும்போது, வீட்டைப் பூட்டிவிட்டு வெளி ஊர்களுக்கு செல்ல வேண்டும் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் திருட்டு நடைபெறுவதை தவிர்க்கலாம்.

இரவு நேரங்களில் வீட்டின் முன்புறமும் பின்புறமும் மின்சார விளக்கானது எரியவிடவும், இரண்டு சக்கர வாகனங்களில் இரவு நேரங்களில் வீட்டின் உள்ளே நிறுத்தி வாகனத்தை பூட்டி வைக்கவும் மற்றும் பெண்கள் துணையின்றி வெளியில் வரும்போது, நிறைய தங்க நகைகளை அணிந்து கொண்டு வருவதை தவிர்க்கவும், இந்த நோய்தொற்று காலத்தில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்கவும் கட்டாயமாக முககவசம்அணிய வேண்டும் என ஆரணி காவல் துணை கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காவல் ஆய்வாளர் திரு.சுப்பிரமணி பேசும்போது களம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும் இதற்கு ஊர் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆலோசனைக் கூட்டத்தில் களம்பூர் காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் மற்றும் களம்பூர் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் இக்கூட்டத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்

திரு.தாமோதரன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

போளூரில் சாலை விதிகளை மீறிய 4517 பேர் மீது வழக்கு

612 திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் காவல் உட் கோட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் சாலை விதிகளை மீறியதாக 4517பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் இடமிருந்து […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452