குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை. டி.ஐ.ஜி திரு.முத்துசாமி உத்தரவு

Prakash

கோவை: கோவை ‘நீலகிரி .திருப்பூர் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை சரகத்தில் காவல்துறை சிறப்பாக செயல்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு துணை சூப்பிரண்டுகள் நிர்வாகத்தின் கீழ் 6 போலீஸ் நிலையங்கள் வருகிறது.  எனவே அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டுகளும் 5 முக்கிய உத்தரவை பின்பற்ற ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கோவை சரக டி..ஜி திரு.முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, முதலாவதாக காவல்துறையின் மதிப்பை பொதுமக்களிடம் உயர்த்த வேண்டும் .அடுத்து சரியாக பணியாற்ற காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை விட அவர்களுக்கு அறிவுரை கூறி நல்வழிப்படுத்த வேண்டும்.

கஞ்சா  லாட்டரி மற்றும் மது திருட்டு விபசாரம் உள்ளிட்ட 12 குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் புகாரை பெற்று ஏற்புமனு ( சி.எஸ்.ஆர்) வழங்க வேண்டும் .அதன் பின்னர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். விறுப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு சரியான முறையில் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும்.

போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தங்களுக்கு கீழே உள்ள போலீஸ் நிலையங்களை சிறப்பாக நிர்வாகிக்க ஆள் எண்ணிக்கை அதிகம் உள்ள போலீஸ் நிலையங்களில் இருந்து குறைந்த எண்ணிக்கையில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு ஆட்களை தற்காலிகமாக மாற்றி சட்டம்-ஒழுங்கு குற்றத்தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

இந்த 5 உத்தரவுகளை செயல்படுத்துமாறு போலீஸ் துணை சூப்பிரண்டுகளுக்கு  ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்ட எல்லைப்பகுதியில் கேரள மாவோயிஸ்ட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


கோவையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

2 டன் ரேசன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

307 காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.இதையடுத்து காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில் காவல் ஆய்வாளர் திரு.விநாயகம் தலைமையிலான […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!