காவல்துறையினர் எந்த சூழ்நிலையில் வாரண்ட் இன்றி கைது செய்யலாமா?

Admin

காவல்துறையினர் எந்த சூழ்நிலையில் வாரண்ட் இன்றி கைது செய்யலாம் என்பதை சட்பபிரிவு 41crpc யில் தெளிவாக அதிகாரம் வழங்கியுள்ளது . அதில் பணிசெய்வதை தடைசெய்தாலும் கைது செய்யலாம் என தெளிவாக அதிகாரம்வழங்கியுள்ளது. வாகன சோதனையில் வண்டி சாவியை எடுக்கவும் அதிகாரம் உள்ளது எனவே பணிசெய்வதை தடை செய்யும்போதும் தாக்குதல் நடத்தினாலும் கைது செய்ய சட்டம் தெளிவாக அதிகாரம் வழங்கியுள்ளது . பிரிவு .46 crpc எப்படி கைது செய்யலாம் என்பதையும் தேவைப்பட்டால் குறைந்த பட்சம் பலம் பிரயோகித்து கைது செய்யவும் பிரிவு 47 crpcல் அவர் பதுங்கியிருக்கும் இடத்தில் நுழைந்து கைது செய்யவும் அதிகாரம் வழங்கியுள்ளது இந்த சட்டப்பிரிவுகளை தெளிவாக தெரிந்துகொண்டு முறையாக வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தால் யாரும் காவல்துறையினர் மீது குற்றம் சாட்டமுடியாது மேலும் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கு உள்ள அதிகாரங்கள் தெரியவேண்டும் காவல்துறையினரிடம் தகராறு செய்யும் போதே பிரிவு 353 ipc332ipc படி குற்றம் செய்தவராகி விடுவகிறார்.

அவரை உடனே கைது செய்யும் அதிகாரமும் காவல்துறையினருக்கு வந்துவிடுகிறது எல்லா அதிகாரமும் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது அதனை முறையாக பயன்படுத்த காவல்துறையினர் தெரிந்து கொள்ளவேண்டும். அதுபோல் குற்றவாளிகள் தாக்கினாலும் ஆயுதங்களால் தாக்கும்போதும் அடிவாங்கவேண்டும் என்று இல்லை தற்காப்புக்காக தாக்கி தற்காத்துக் கொள்ள உரிமைகள் உள்ளது

கொலைமுயற்சி மேற்கொண்டால் தற்காப்புக்காக தாக்குதல் நடத்தி கொலையே ஆனாலும் தற்காப்பு உரிமையுள்ளது.

மேலும் அற்ப சிறு குற்றம் செய்பவர்களையும் முகவரி கேட்டு சொல்ல மறுத்தாலும் தவறான முகவரி சொன்னதாக சந்தேகம் ஏற்பட்டாலும் அவர்களைபிரிவு 42 crpcபடி கைது செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு உள்ளது சட்டம் அறிவோம் நவீன காவலர்களால் மட்டுமே காவல்துறையின் கலக்கத்தைக் கலைத்தெறிய முடியும்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சாலையில் சிதறிக்கிடந்த ஜல்லி கற்களை அகற்றிய போக்குவரத்து முதல்நிலை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு

386 மதுரை : பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் ESI மருத்துவமனை அருகே ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற லாரியின் கதவு திறந்து சாலையில் சிதறிய ஜல்லி கற்களை […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452