காவலர் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை, மாவட்ட எஸ்.பி மணிவண்ணன்

Admin

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினர் மற்றும் காவல் அமைச்சுப்பணியாளர்களின் வாரிதாரர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழக அரசிற்கு காவல்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. அதன் மூலம் காவல்துறையில் பணியிலிருக்கும் போது உயிரிழந்த காவல்துறையினர் மற்றும் காவல் அமைச்சுப்பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 63 பேருக்கு தகவல் பதிவு உதவியாளர் (Data Entry Assistant) பதவிகளில் தமிழக அரசு பணி நியமனம் செய்துள்ளது. மேற்படி அரசு பணியாணையை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று (18.01.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் வழங்கி பணி சிறக்க வாழ்த்தினார்கள்.

இந்நிகழ்வின் போது மாவட்ட காவல் அலுவலக அ.பிரிவு கண்காணிப்பாளர் திரு.R. புஷ்பாகரன் அவர்கள் உடனிருந்தார்கள்.


நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ஜெய்ஹிந்த்புரத்தில் வாலிபர் விபரித முடிவு

742 மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் கடன் பிரச்சினையால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை ஜன 18 ஜெய்ஹிந்த்புரத்தில் கடன் பிரச்சினையால் […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452