காணாமல் போன சிறுவனை உடனடியாக மீட்ட காவல்துறையினர்

Admin
அரியலூர் : அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய சரகம் ரெட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மு.புத்தூர் கிராமத்தை சேர்ந்த சிறுவன் 12.02.2021 மாலை 4 மணி அளவில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் காணவில்லை என்று விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் அடிப்படையில் விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சரத்குமார் அவர்கள் தனிப்படை அமைத்து, அந்த தனிப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ரவிசந்திரன், காவலர்கள் திரு.பாலாஜி மற்றும் ஊர்காவல்படை வீரர் திரு.தமிழ்செல்வன், விக்கிரமங்கல காவல் நிலைய தன்னார்வலர்கள் திரு.அசோக்ராஜ், திரு.தினகரன், திரு.கார்த்திக், வழக்கறிஞர் திரு.அறிவழகன் ஆகியோர் இணைந்து தேடியதில் இரவு 12 மணியளவில் ரெட்டிபாளையம் அருகே உள்ள தனியார் கனிமசுரங்கம் அருகே கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
வழிதவறி சென்ற சிறுவனை உடனடியாக மீட்ட விக்கிரமங்கலம் காவல்துறையினரை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வீ.இரா.ஸ்ரீனிவாசன் அவர்கள் பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

உடம்பில் அணியும் புதிய நவீனரக கேமராக்கள்

322 தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்முதலாக காவல்துறையினர் மேற்கொள்ளும் பணிகளை வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படம் எடுக்க தமிழக அரசு வழங்கிய ரூ. 3,78,000/- மதிப்பிலான […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452