காணாமல் போன குழந்தையை சில மணி நேரங்களில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த தலைமைக்காவலர்.

Admin

கடலூர் : கடலூர் மாவட்டம் பெரியபரூர் கிராமத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது 7 வயது குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்கு சென்றார். பகல் 3 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாததால் குழந்தை தனது அம்மாவை தேடி வீட்டை விட்டு வெளியே சென்றது. மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்து பார்த்த தாய் தனது மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே விரைந்து சென்ற காவலர் திருமதி.அஷ்டலட்சுமி அவர்கள் காணாமல் போன குழந்தையை தேடிய போது, உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நின்றிருந்த குழந்தையை மீட்டு விசாரித்த போது குழந்தையை காணாமல் பரிதவித்த தாயின் குழந்தை என்பது தெரியவந்ததையடுத்து தாயிடம் ஒப்படைத்தார். குழந்தையை கண்டிபிடிக்க உதவிய காவலருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து சென்றார்.


விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

 

 

 

 

திரு.சதீஸ் குமார்


Leave a Reply

Your email address will not be published.

Next Post

ஏழை மாணவனின் கனவை நிறைவேற்றிய ஆய்வாளர்

450 மயிலாடுதுறை : திருவிழந்தூர் வடக்கு ஆராயத்தெரு சுரேஷ் என்பவரின் மகன் வீட்டில் வேலை செய்யும் வயதான பாட்டியின் பராமரிப்பில் இருந்த சதீஷ்குமார் வயது 17 என்பவர் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452