காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி, ஈரோடு, விருதுநகர் மாவட்ட காவலர்கள் கொண்டாடிய பொங்கல் விழா

Admin

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற காவல் பொதுமக்கள் பொங்கல் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோமதி, கோலப்போட்டியில் பங்கேற்று கோலமிட்டார்.

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்ற காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், கரண்டியை பிடித்து சர்க்கரை பொங்கலை கலக்கினார், அவரை தொடர்ந்து மற்ற காவல் அதிகாரிகளும் கலக்கினர்.

பொங்கல் படைக்கப்பட்டவுடன் தீபாரதனை காட்டி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்தார் காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன்.

ஈரோடு மாவட்ட காவல் காண்காணிப்பாளர் சிவக்குமார் சிறப்புபடை எஸ்.பி. பாண்டியராஜன் தலைமையில் கடம்பூர் மலைகிராமத்தில் சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டி நடந்தது

விழாவில் தனியார் பங்களிப்புடன் மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

பொங்கல் அன்றும்இ காணும் பொங்கல் தினத்தன்றும் ஓய்வின்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கும் தமிழக காவல்துறையினருக்கு இந்த பொங்கல் விழா நிச்சயம் மன அழுத்தத்தை குறைத்திருக்கும் என்பது மட்டும் உண்மை.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

வாலிபரை கொலை செய்து எரித்த வழக்கில் கைது செய்யபட்டவர் மீது குண்டாஸ்

63 கடலூர்: விருத்தாசலம் வி.சாத்தமங்கலம் வடக்குதெருவை சேர்ந்தவர் ஜம்புலிங்கம் (35). இவரை முன்விரோதம் காரணமாக கடந்த 8.12.2017 அன்று குப்பநத்தநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த கண்ணன் (35), […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452