கடத்தலில் ஈடுபட்ட6 பேர் கைது, விரைந்து செயல்பட்ட விருகம்பாக்கம் காவல்துறையினர்

Admin

சென்னை : சென்னை , சாலிகிராமம், சினிமா போட்டோ கிராபர் நியூட்டன் , வ/44, என்பவர் 19.02.2021 அன்று தனது நண்பரை பார்க்க செல்வதாக மனைவி கௌசல்யாவிடம் கூறிவிட்டு வெளியே சென்றவர் மறுநாள் 20.02.2021 இரவு வரை வீடு திரும்பததால் மேற்படி கௌசல்யா இது குறித்து R-5 விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கௌசல்யாவின் அப்பாவின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட நியூட்டன் , தானும் ஆடிட்டர் குருஜியும் ரூ .30 லட்சம் பணத்திற்காக கடத்தப்பட்டுள்ளதாகவும், பணத்தை தாயர் செய்யும் படியும், இல்லை என்றால் தங்களை கடத்தல்காரர்கள் கொலை செய்து விடுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த தகவலை விருகம்பாக்கம் காவல் ஆய்வாளரிடம் தெரிவித்தன் பேரில், R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் விசாரனை செய்து தி.நகர் சைபர் குற்றப்பிரிவு காவல் குழுவினர் உதவியுடன் மேற்படி பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இருவரை கடத்திய 1.திலீப், வ/28, திருவேற்காடு 2.சதீஷ்குமார், வ/39, வியாசர்பாடி 3.சுனில்குமார், வ/31, திருவள்ளூர் மாவட்டம் 4.கௌதம், வ/25, இராணிப்பேட்டை மாவட்டம் 5.விக்கி (எ) விக்னேஷ், வ/22, திருவள்ளூர் மாவட்டம் 6. சீனிவாசன், வ/33, கொளத்தூர் ஆகிய 6 நபர்களை கைது செய்தனர் . நியூட்டன் மற்றும் குருஜி ஆகிய இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கடத்தல்காரர்களிடமிருந்து 1 கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் குற்றவாளிகள்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் குழுவினரால் கைது

401 சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் சிறப்பு உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452