கஞ்சா விற்பனை, எண்ணூர் காவல் குழுவினரால் கைது

Admin

சென்னை : தி.நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ரூபேஷ் ரெட்டி (ஆந்திரா) உட்பட 3 நபர்கள் R-4 பாண்டிபஜார் காவல் குழுவினரால் கைது மற்றும் எண்ணூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ராம்கி (எர்ணாவூர்) என்பவர் M-5 எண்ணூர் காவல் குழுவினரால் கைது. 4 கிலோ 900 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டன.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS ” தொடர்ச்சியாக, R-4 பாண்டிபஜார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், 27.02.2021 அன்று காலை, தி.நகர், ராஜா பாதர் தெருவில் கண்காணித்தபோது, அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1.ரூபேஷ் ரெட்டி, வ/21, ஆந்திர மாநிலம், 2.சயிலேஷ் ராயல், வ/21, ஆந்திர மாநிலம், 3.வெங்கட நாகேந்திரபாபு, வ/21, ஆந்திர மாநிலம் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். மேலும், M-5 எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், 28.02.2021 இன்று காலை, இராமகிருஷ்ணாநகர், கடற்கரை அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ராம்கி, வ/30, எர்ணாவூர், என்பவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கிலோ 900 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டு அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கிக் பாக்ஸிங் சாம்பியன் பட்டம் வென்ற பழனி தாலுகா சார்பு ஆய்வாளர்!

451 திண்டுக்கல்: பழனி தாலுகா காவல்நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜா சாம்பியன் ஆஃப் சாம்பியன் போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவின் ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452