கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

Prakash

கோவை: கோவை பீளமேடு சப் இன்ஸ்பெக்டர் திரு.சுகன்யா நேற்று இரவு சரவணம்பட்டி -துடியலூர் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார். அப்போது சந்தேகப்படும்படி 2 பைக்கில் வந்த 4 ஆசாமிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவர்களிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை கடத்தி வந்த கணபதி நேரு நகரைச் சேர்ந்த சுவிக்சன்பெர்னார்டு ( வயது 22) காந்திபுரம் முதல் வீதியை சேர்ந்த ஞானசேகர் (வயது 25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .கவுதம் ஜெயசிங் ஆகியோர்தப்பி ஓடிவிட்டனர் .

இவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா 2 பைக் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய கவுதம் ஜெய்சிங் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வடமாநில தொழிலாளர்கள் 50 பேர் சிக்கினர்

317 கோவை: கோவை பக்கமுள்ள சோமனூர் – ராசிபாளையம் இடையே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ரெயில் வந்தபோது திடீரென்று அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை  […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!