ஏழை மாணவனின் கனவை நிறைவேற்றிய ஆய்வாளர்

Admin

மயிலாடுதுறை : திருவிழந்தூர் வடக்கு ஆராயத்தெரு சுரேஷ் என்பவரின் மகன் வீட்டில் வேலை செய்யும் வயதான பாட்டியின் பராமரிப்பில் இருந்த சதீஷ்குமார் வயது 17 என்பவர் கடந்த 2019 ஆண்டில் 10 ஆம் வகுப்பு பாஸ் செய்து விட்டு மேலே 11 வகுப்பு சேர்த்து படிக்க வைக்க வசதி இல்லாமல் கட்டிட மற்றும் கிடைக்கும் கூலி வேலைக்கு போய்க்கொண்டிருந்தவரை மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி கோப்பெருந்தேவி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு உறுப்பினர் பெண்காவலர் ரம்யா ஆகியோர்கள் மீட்டு, சதீஷ்குமார் விருப்பப்படி, பத்தாம் வகுப்பு படித்த மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலை பள்ளியில் 11 ஆம் வகுப்பில் சேர்த்து பள்ளிக்கு செல்ல உதவி புரிந்துள்ளார்கள்.
மேற்படி நிகழ்வை செய்து, ஏழை மாணவனின் விருப்பத்தை நிறைவேற்றிய மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி கோப்பெருந்தேவியை மயிலாடுதுறைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முனைவர் N. ஸ்ரீநாதா இகாப அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கருப்பு வைரம் என கூறி ரூபாய் 27 லட்சம் மோசடி

950 தூத்துக்குடி : தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெங்களூர் ஜே.பி நகர் கொத்தனூர் தின்னே பகுதியை சேர்ந்தவர் சீதாராமன் மகன் அனந்தா (37) […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452