எஸ்.எஸ்.காலனி, திருமங்கலம், அலங்காநல்லூர் காவல் நிலையங்களில் பதியப்பட்ட முக்கிய வழக்குகள்

Admin

மதுரை பொன்மேனியில் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

மதுரை: மதுரைபொன்மேனியில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர்தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
மதுரை பொன்மேனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்வசித்து வந்தார் செந்தில்குமார் 35. இவருக்கும் இவர்மனைவி சரண்யாஇருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக மனமுடைந்த செந்தில்குமார் வீட்டில் தூக்குபோட்டு
தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மனைவி சரண்யா கொடுத்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

******

மதுரை பைபாஸ் ரோட்டில் மனைவி குழந்தைக்கு விஷம்மாத்திரை கொடுத்து கணவர் தற்கொலை,போலீஸ் விசாரணை

மதுரை பைபாஸ் ரோட்டில் மனைவி குழந்தைக்கு விஷமாத்திரைகொடுத்து கணவரும் தின்றுதற்கொலை செய்து கொண்டார். மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் ராமகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் 48 .இவர் பிளம்பர் வேலை பார்த்து வந்தார் .இவருக்கும்19 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது .மனைவி மாரிமுத்து.இவர்களுக்கு சிவபாலகுரு ,நடராஜ் என்ற 2 மகன்கள் உள்ளனர். வேல்முருகனுக்கு தொடர்ந்து வேலை இல்லை .இதனால் கடன் வாங்கி செலவழித்து வந்தார் .கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் மனமுடைந்து காணப்பட்டார் .இதனால்குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார் .வேல்முருகன் தனது மனைவி மாரிமுத்து மகன் சிவபாலன் இருவருக்கும் விஷமாத்திரையை கொடுத்து விட்டு தானும் விஷ மாத்திரையை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.இந்த தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை உடனடியாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.மனைவி மற்றும் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது குறித்து அண்ணன் பாலசுப்ரமணியன்கொடுத்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் வேலையில்லாமல்வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததால் இந்த முடிவை எடுத்ததாக தெரியவருகிறது.மேலும் சாவுக்கான காரணம்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
********

மதுரை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் டிரைவர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

மதுரை அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அருகே திருமங்கலம் அம்மா பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் 57 .இவர் அரசு போக்குவரத்து கழக டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த பனி ரெண்டுவயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் .போலீஸார் டிரைவர் கிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*******

மதுரை அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை வாலிபர் கைது

மதுரை அருகே மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மதுரை அருகே வாடிப்பட்டி கோவிலூரை சேர்ந்தவர் துரைசாமி மகன் ராமச்சந்திரன் 28 .இவர் 17 வயதான பிளஸ்டூ மாணவி மாணவியை தாராபுரம் கடத்திச் சென்றுள்ளார் .பின்னர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்து வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் ராமச்சந்திரனை கைது செய்தனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பள்ளியில் பயின்ற பெண் காவலர்கள் சந்திப்பு மதுரையில் நடந்தது

331 மதுரை: தமிழகமெங்கும் பணியாற்றும் மதுரை காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற பெண் காவலர்களின் சந்திப்பு மதுரையில் நடந்தது. மதுரை காவலர் பயிற்சிப் பள்ளியில் 1997-ஆம் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452