இன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021

Admin

எஸ் எஸ் காலனியில் மன அழுத்த நோயில் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

மதுரை : பிப் 27 எல்லீஸ்நகரை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் மகன் நாகராஜன் 22 .இவர்மன அழுத்தநோயால் பாதிககபபடடிருநதார்.அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இதுதொடர்பாக அம்மா காளீஸ்வரி கொடுத்த புகாரில் எஸ் எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


பெத்தானியாபுரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்
தூக்குப்போட்டு தற்கொலை

மதுரைபிப் 27 பெத்தானியாபுரம்ஜீவா தெருவை சேர்ந்தவர் சுரேஷ் 45.இவர் தனிமையாக இருந்து வந்த நிலையில் அவருக்கு காய்ச்சலும் வந்தது .இதனால் மனம் உடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை குறித்து கரிமேடுபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மதுரை வண்டியூரில் பண பிரச்சனையால் தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை

மதுரை 27 வண்அடியூரை சேர்ந்த தொழிலதிபர் பணப் பிரச்சினையால் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். வண்டியூர் மாந்தோப்பு காமராஜர் முதல் தேவை சேர்ந்தவர் கண்ணன் 40 .இவர் அழகிய சிங்கம் நகரில் மருந்து பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு பண பிரச்சனை இருந்து வந்தது .இதனால் மனைவியுடன் கருத்து வேறுபாடும் ஏற்பட்டது. இந்நிலையில் மனம் உடைந்தகண்ணன் தொழில் நடத்தி வரும் இடத்திலேயே கேபிள் வயரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மனைவி அன்னபாக்கியம் கொடுத்த புகாரில் அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மதுரை தெப்பக்குளம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

மதுரை பிப் 27தெப்பக்குளம் பகுதியில் கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைதுசெய்தனர். சந்தப்பேட்டை காமாட்சி புரத்தை சேர்ந்தவர் பால்ராஜ் 39 .இவர் அனுப்பானடி ரோட்டில் நடந்து சென்ற போது புது மீனாட்சி நகர் சிமெண்ட் ரோடு வைச் சேர்ந்த வினோத் 33 என்பவர் கத்தியை காட்டிமிரட்டி ரூபாய் முன்னூரைவழிப்பறி செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பால்ராஜ் கொடுத்த புகாரில் தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர்.
********

மதுரை திடீர்நகர்பகுதியில் கத்தி முனையில் வழிப்பறி ஒருவர் கைது

மதுரை பிப்27 திடீர்நகரில் கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட வரை போலீசார் கைது செய்தனர்.அண்ணாநகர் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன்42. இவர் மேல மாரட் வீதியில் நடந்து சென்றபோது அவரை கத்திமுனையில் மிரட்டி அவர் வைத்திருந்த ரூபாய் 200ஐ வாலிபர் ஒருவர்பறித்துச்சென்றுவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திகேயன் திடீர்நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட தலை விரிச்சான்சந்துவைசேர்ந்த ஞானவேல் என்பவரைபோலீசார் கைது செய்தனர்.


மதுரை செல்லூரில் வீடு புகுந்து நகை பணம் திருட்டு திருட்டு ஆசாமி கைவரிசை

மதுரை பிப் 27 செல்லூர் பகுதியில் வீடு புகுந்து நகை பணம் திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர் .செல்லூர் 50 அடி ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் 38. இவர் சம்பவத்தன்று வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது வீடு புகுந்த மர்ம நபர் வீட்டில் பீரோவில் வைத்திருந்த ஒன்னேகால் பவுன் நெக்லஸ், செல்போன்ஒன்று, பணம் ரூபாய் 1500 ஐ திருடிச்சென்றுவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சுரேஷ்செல்லூர் போலீசில்புகார்செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டுஆசாமியைதேடி வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.

678 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452