உயிரிழந்த காவலர் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய உயர் அதிகாரி

Admin

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பணியின் போது வீர மரணமடைந்த ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. பாலு அவர்களின் புகைப்படத்திற்கு இன்று மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. எஸ். முருகன் இ.கா.ப அவர்கள் அவரது வீட்டிற்கு நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார்.

ஏரல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. பாலு அவர்கள் கடந்த 01.02.2021 அன்று கொலை செய்யப்பட்டு வீர மரணமடைந்தார்.

அவரது சொந்த ஊரான முடிவைத்தானேந்தலில் உள்ள அவரது வீட்டிற்கு மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. எஸ். முருகன் இ.கா.ப அவர்கள் இன்று (04.02.2021) நேரில் சென்று பாலு அவர்களின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின் அவரது மனைவி திருமதி. பேச்சியம்மாள், மகன் திரு. அருண் வேலாயுதம், மகள் ஜெயதுர்க்கை வேணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கோபி, ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஞானராஜ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. நம்பிராஜன் மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டனர்.


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு கோவை பல் மருத்துவர் இன்று கைது

505 மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருந்ததாக கோவையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஒருவரை கேரளா போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் உள்ளவர்களை தொடர்ந்து சிறப்பு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452