உதவி ஆய்வாளரின் உடலை சுமந்து சென்ற தென் மண்டல IG

Admin
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பணியின் போது விபத்து போல் கொலை செய்யப்பட்ட ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. பாலு அவர்கள் உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கி. செந்தில்ராஜ் இ.ஆ.ப, மதுரை தென்மண்டல் ஐ.ஜி திரு. எஸ். முருகன் இ.கா.ப, மதுரை சரக டி.ஐ.ஜி திரு. ராஜேந்திரன் இ.கா.ப, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் M.S c (Agri) ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நேற்று அதிகாலை (01.02.2021) சாலை விபத்து போல் கொலை செய்யப்பட்ட ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பாலு அவர்களது உடல், அவரது சொந்த ஊரான முடிவைத்தானேந்தலுக்கு கொண்டு சென்று அங்கு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. அப்போது அவரது உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கி. செந்தில்ராஜ் இ.ஆ.ப, மதுரை தென்மண்டல் ஐ.ஜி திரு. எஸ். முருகன் இ.கா.ப, மதுரை சரக டி.ஐ.ஜி திரு. ராஜேந்திரன் இ.கா.ப, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் M.Sc (Agri) ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின் அவர்களை தொடர்ந்து தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன், தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு. எஸ். சின்ரன்ஜித் சிங் கலோன் இ.ஆ.ப, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பொன்னரசு உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், காவல்துறையினர், உற்றார், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கீழமாரட் வீதியில் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்ய ஏற்பாடு

813 மதுரை: மதுரை, தெற்கு வாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் அவர்கள் உத்தரவுப்படி இன்று 02.02.2021 – ம் தேதி காவல் உதவி ஆய்வாளர் திரு. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452