உடம்பில் அணியும் புதிய நவீனரக கேமராக்கள்

Admin
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்முதலாக காவல்துறையினர் மேற்கொள்ளும் பணிகளை வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படம் எடுக்க தமிழக அரசு வழங்கிய ரூ. 3,78,000/- மதிப்பிலான உடம்பில் அணியும் (Body Worn Camera) 27 கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று காவல்துறையினருக்கு வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரின் பயன்பாட்டுக்கென தமிழக அரசு ரூ. 3,78,000/- மதிப்பிலான 27 உடம்பில் அணியும் புதிய நவீன ரக கேமராக்களை (Body Worn Camera) வழங்கியுள்ளது. இந்த கேமராக்களை காவல்துறையினர், தங்கள் சட்டையில் அணிந்து கொண்டு அவர்கள் பணிகளை மேற்கொள்ளும்போது அந்த இடத்தில் நடைபெறும் சம்பவங்களை வீடியோ, ஆடியோ, போட்டோ ஆகியவை பதிவு செய்யக்கூடிய வசதி உள்ளது.
இதை காவல்துறையினர் வாகன சோதனை, மனு விசாரணை, ரோந்து செல்லுதல், போக்குவரத்து சீர் செய்தல் போன்ற காவல்துறையின் பல்வேறு வகையான பணிகளுக்கும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இது காவல்துறையினருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
முதற்கட்டமாக ஒரு காவல் நிலையத்திற்கு 3 கேமராக்கள் வீதம் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய காவல் நிலையங்களான தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆறுமுகநேரி, திருச்செந்தூர், கோவில்பட்டி கிழக்கு, கோவில்பட்டி மேற்கு மற்றும் விளாத்திக்குளம் ஆகிய 9 காவல் நிலையங்களுக்கு இன்று (15.02.2021) மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் இதன் செயல்பாடுகள் குறித்தும், அதனை பயன்படுத்தும் முறை பற்றியும் விளக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அறிவுரைகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன், தூத்துக்குடி தொழில்நுட்ப பிரிவு காவல் ஆய்வளார் திரு. கிருஷ்ணசாமி, உதவி ஆய்வாளர்கள் திரு. ஆறுமுகம், திரு. மகேஷ் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மெச்ச தகுந்த பணி புரிந்த காவல்துறையினருக்கு பாராட்டு

346 தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 30 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452