இன்றைய மதுரை கிரைம்ஸ் 23/02/2021

Admin

மதுரை கோவலன்நகரில் கடையின்மேற்கூரையை உடைத்து 30 ஆயிரம் கொள்ளை
மதுரை 23 மதுரை கோவலன்நகரில் கடையின் மேற்கூரையை உடைத்து முப்பதினாயிரம் கொள்ளையடித்து சென்ற திருட்டு ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை கோவலன்நகர்விரிவாக்க பகுதி இபி காலனியைசேர்ந்தவர் வத்ஸலா50. இவர் வெங்கடாசலபுரம் மெயின் ரோட்டில் கம்யூனிகேஷன் சென்டர் நடத்தி வருகிறார். வழக்கம்போல்இரவு கடையை அடைத்துவிட்டு சென்று மறுநாள் வந்து பார்த்தபோது கடையில் மேற்கூரையை உடைக்கப்பட்டுஇருந்தது.கடையின் உள்ளே வைத்திருந்த ரூபாய் 30 ஆயிரத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக சுப்ரமணியபுரம் போலீசில் வத்சலாபுகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
*****

மதுரை எஸ் எஸ் காலனியில் எட்டு வயது வளர்ப்பு மகள் பலாத்காரம் தந்தை கைது

மதுரை.பிப்23 மகபூப்பாளையத்தில் எட்டு வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த தந்தை கைது. மதுரை மகபூப் பாளையம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் 30 .இவர் இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவரைஇரண்டாவது திருமணம் செய்துள்ளார்.அவர்அவருடைய எட்டு வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்துள்ளார் .இது அந்தபெண்ணின் தாய்க்கு தெரியவந்தது.தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.
******

மதுரை அண்ணாநகரில் கார் பார்க்கிங் செய்வது தொடர்பாக டிரைவர்களுக்குள் மோதல் 2 பேர் கைது

மதுரை பிப் 23 அண்ணாநகரில் கார் பார்க்கிங் செய்வது தொடர்பாக டிரைகளுக்குள் நடந்த மோதலில் 2 பேரை போலீசார் கைது செய்தனர் மதுரை பூதகுடி கீழத் தெருவை சேர்ந்தவர் ரமணி 33. இவர் டாக்சி டிரைவராக வேலைபார்த்துவரீகிறார்.80 அடி ரோடு கேகே நகரில் கார் பார்க்கிங் செய்வது தொடர்பாக அவருக்கும்மற்றும் சில டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது தகறாறாகக மாறியது. இதில் மற்ற டிரைவர்கள் ரமணியைதாக்கி விட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக டிரைவர் ரமணி கொடுத்த புகாரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமிபதி 25 ரூபன்மாணிக்கராஜ் 29 இருவரையும் கைது செய்தனர்.இந்தமோதல் தொடர்பாகமொத்தம் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

******


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பார்லரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார்

546 சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் காவல் ஆணையாளர் அலுவலக அமைச்சுப்பணியளார்கள் மற்றும் காவல் ஆளினர்கள் ஆவின் பார்லர் ஏற்படுத்திட வேண்டுகோள் விடுத்ததை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452