இன்றைய மதுரை கிரைம்ஸ் 19/02/2021

Admin

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் மது கொடுத்து மயங்கச்செய்து சிறுமிபலாத்காரம் வாலிபர் கைது

மதுரை ஜெய்ஹிந்புரத்தில் மது கொடுத்து சிறுமியை மயக்கி பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் ஜானகி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் செந்தில்குமார் 36 .இவர் சிறுமி ஒருவருக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து மயங்கச் செய்து அவரை பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பின்னர் சிறுமி கொடுத்த புகாரின் பேரில் டவுன் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில் குமாரை கைது செய்தனர்.
********

மதுரை கீரைத்துறையில் கருவேல மரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

மதுரை ஆல மரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் கீழ அனுப்பானடி பூக்கார தெருவை சேர்ந்தவர் நிறைகுளத்தான் மகன் முருகன் என்ற மண்டப முருகன் . இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது இதனால் மனமுடைந்த முருகன்அந்த பகுதியில் உள்ள கருவேலமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
******

அவனியாபுரத்தில் கணவனுடன் தகராறு காரணமாக மனைவி விஷம் குடித்து தற்கொலை

மதுரை கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக விஷம் குடித்து மனைவி தற்கொலை செய்து கொண்டார் .அவனியாபுரத்தை சேர்ந்தவர் முத்துமணி மனைவி புவனேஸ்வரி 21 இவருக்கும் கணவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார் நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் புவனேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து அவருடைய அம்மா குருவம்மாள் கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
*******

மதுரை அண்ணாநகரில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து பலி

மதுரை பிப் 19 மதுரை தச்சம்பத்துவை சேர்ந்தவர் செல்வம் 45 .இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.இவர் ஆண்டார் கொட்டாரம் கபீர் நகரில் நடந்து சென்ற போது மயங்கி விழுந்து பலியானார். இதுகுறித்து தம்பி நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
******

மதுரை பி.பி .குளத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர் கைது

மதுரை  காமராஜர் நகரைசேர்ந்தவர் ரவிச்சந்திரன் 60. இவர் பி.பி.குளம் உழவர்சந்தை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுவிற்பனை செய்தபோது தல்லாகுளம் போலீசார் அவரை கைது செய்தனர் .அவரிடமிருந்து லாட்டரி சீட்டு விற்பனை செய்த பணம் ரூபாய் 190ஐயும் பறிமுதல் செய்தனர்.
*********

மதுரை அழகப்பன் நகரில் வீட்டை உடைத்து பணம் கொள்ளை

மதுரை வீட்டை உடைத்து பணம் கொள்ளை அடித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர் அழகப்ப நகர் நேரு நகர் 4வது தெருவில் சேர்ந்தவர் தேவசேனா 56 .இவர்குடும்பத்துடன்வெளியூர் சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பீரோவில் வைத்திருந்த பணம் ரூபாய் 30,000 மற்றும் ஒரு செல்போனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தேவசேனா சுப்ரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். சுப்ரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
********

மதுரை அழகப்பன்நகரில் வீட்டை உடைத்து நகை திருட்டு

மதுரை  அழகப்பன்நகரில்வீட்டைஉடைத்து நகே திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். அழகப்பன் நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் பரத்ராஜ் 32.இவர் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார்.பின்னர் திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்திருடிச் சென்று விட்டார் .இந்த சம்பவம் தொடர்பாக பரத்ராஜ் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
*****


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காணாமல் போன 9 குழந்தைகளை கண்டுபிடித்துள்ள திண்டுக்கல் காவல்துறையினர்

331 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கூடுதல் காவல் துறை இயக்குநர் தலைமையகம், பொறுப்பு பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்பு பிரிவு, அவர்களின் உத்தரவு படி கடந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452