இன்றைய மதுரை கிரைம்ஸ் 17/02/2021

Admin

மகளிர் சுய உதவி குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் பெண் தற்கொலை

மகளிர் சுய உதவி குழுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். திருநகர் நெல்லையப்பபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு மனைவி நிர்மலா 36. இவர் மகளிர்சுய உதவிக்குழுவில்ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கடன் பெற்றுள்ளார். இந்த கையை திருப்பிச் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டுவந்தார். இதனால் சுய உதவிக் குழுவினருடன் மனவருத்தம் ஏற்பட்டது. இதன்காரணமாக மன உலச்சலில் இருந்தவர் வீட்டில் விஷம் தின்று தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக கணவர் சுரேஷ்பாபு கொடுத்தபுகாரில் திருநகர் போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
********

மதுரை ஆரப்பாளையத்தில்பிளாட்பாரத்தில் கடைநடத்தியவர் கைது

மதுரை ஆரப்பாளையம் மஞ்சள்மேடுமினிகாலனியைசேர்ந்தவர்ரவிச்சந்திரன் மகன் விக்னேஷ்வரன்23.இவர் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும்வகையில் பிளாட்பா ஏ.ஏ.ரோடு பிளாட்பாரத்தில்திடீரென்று மீன்கடை நடத்தினார். பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததால் கரிமேடுபோலீசார் விக்னேஷ்வரன் மீது வழக்குப்பதிவுசெய்துஅவரைகைதுசெய்தனர்.
******

மதுரை கூடல்நகரில் கத்திமுனையில் வழிப்பறி  வாலிபர்கைது

மதுரை விளாங்குடி சொக்கநாதபுரம்இரண்டாவது தெருவை சேர்ந்தவர் கோபி38. இவர் கூடல்நகர் மெயின்ரோட்டில் சென்றபோது அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி அவரிடமிருந்த செல்போனையும் அவர் வைத்திருந்த ரூபாய் என்னூறையும் வாலிபர் ஒருவர் பறித்துச்சென்றுவிட்டார். இது தொடர்பாக கோபி கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம்பறித்த ரமேஷ் என்ற ரெக்கடி ரமேசை தேடிவருகின்றனர்.
********

அவனியாபுரத்தில் எல.ஐ.சி.மேலாளர் வீட்டை உடைத்து பத்தொன்பதுபவுன் நகை கொள்ளை

மதுரை அவனியாபுரத்தில் எல.ஐ.சி.மேலாளர் வீட்டை உடைத்துபத்தொன்பதுபவுன் நகைகொள்ளை. அவனியாபுரம் மண்டேலாநகர் நாகப்பாநகரை சேர்ந்தவர் பாண்டிவேல் 41. இவர் அருப்புக்கோட்டையில் எல.ஐ.சி.யில் உதவிமேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டார்.

இவர் மனைவி மாலதி தன் குழந்தைகளுடன் அருகில் உள்ள போலீஸ் குடியிருப்பில் துக்க வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் மாதவி திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பீரோவில் வைத்திருந்த பத்தொன்பது பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை தொடர்பாக பாண்டிவேல் அவனியாபுரம் போலீசில் புகார்செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை ஆசாமிகளை தேடிவருகின்றனர்.
*********

மதுரையில்நடந்த விபத்தில் இரண்டு பேர் பலி

மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் நடந்த விபத்தில் இரண்டு பேர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். கீரைத்துறை மேலத்தோப்பு தெருவை சேர்ந்தவர் முத்து 63.இவர் மேலவடம் போக்கி தெருவில் சென்ற போது பைக்மோதி படுகாயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சே பலன்இல்லாமல் முத்து பறிதாபமாக உயிரிழந்தார்.

அவனியாபுரம் தந்தை பெரியார் நகர் பூச்சிதெருவை சேர்ந்தவர் முனியாண்டி மகன் ராம்குமார் 19. இவரும் செம்பூரணி தெருவை சேர்ந்த‌ தங்கம் மகன் கௌதம் 18 இருவரும் பைக்கில் வெள்ளக்கல் பகுதியில் சொன்றபோது காரியாபட்டியில் இருந்து மதுரை வந்த அரசு டவுன்பஸ் மோதி விபத்தானது. இதில் சம்பவ இடத்திலேயே ராம்குமார் பலியானார்.
இந்த விபத்துகள் தொடர்பாக போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

342 சென்னை: தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்ட உத்தரவு […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452