இன்றைய மதுரை கிரைம்ஸ் 16/02/2021

Admin

பொது இடத்தில் மது குடித்ததை தட்டிக் கேட்ட வருக்கு அடி உதை ஒருவர் கைது

மதுரை பொது இடத்தில் மது குடித்ததை தட்டி கேட்டவரை தாக்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை விளாங்குடி சொக்கநாதபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் 56. இவர் அதே பகுதியில் நடந்து சென்ற போது பொது இடத்தில் இரண்டு பேர் மது அருந்திக்கொண்டிருந்தனர் .அவர்களை முத்துராஜ் கண்டித்துள்ளார் .இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அவரை தரக்குறைவாகபேசியும் தல்லாலும் தாக்கிஉள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக கூடல்புதூர் போலீசில் முதஅதுராஜ்புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தி என்ற ஒட்டி மூர்த்தி 53 என்பவரை கைது செய்தனர் மற்றொருவரை தேடி வருகின்றனர்.
********

மதுரையில் சிறுமிக்கு திருமணம், மாப்பிள்ளை உள்பட பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு

மதுரை அருகே சிறுமியை திருமணம் செய்த மாப்பிள்ளை உள்பட பெற்றோர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை ஆண்டார் கொட்டாரம் ஒத்தவீடு பகுதியில் சிறுமிக்கு திருமணம் நடந்துள்ளது .தகவல் அறிந்த மதுரை கிழக்கு பஞ்சாயத்து யூனியன் சமூக நல அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த மாப்பிள்ளை கோடீஸ்வரன் 26 அவருடைய அப்பா ராசு,அம்மாஆறுமுகம்,சிறுமியின்அப்பா அம்மா வாசை அம்மா பரமேஸ்வரி ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*******

மதுரையில் மனைவியைவிவாகரத்து செய்தலோடுமேன் தூக்குப்போட்டு தற்கொலை

மதுரை மனைவியை விவாகரத்து செய்ததால் மனமுடைந்து லோடுமேன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆழ்வார்புரம் வைகை வடகரையை சேர்ந்தவர் பொய்யாழி மகன் மாடசாமி 27. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இவர் லோடுமேனாக வேலை பார்த்துவந்தார். அவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு வருடங்களுக்கு முன்பு விவாகரத்துபெற்றுவிட்டார். இதனால்மனமுடைந்து காணப்பட்ட லோடுமேன் மாடசாமி வீட்டில்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அப்பா பொய்யாழி கொடுத்த புகாரின் பேரில் மதிச்சியம்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

**********

மதுரை விளாங்குடியில் கத்திமுனையில் வழிப்பறி செய்த சிறுவன் கைது

மதுரை விளாங்குடி பகுதியில் கத்தி முனையில் வழிப்பறி செய்த சிறுவனை போலீசார் கைது செய்தனர் .விளாங்குடி சொக்கநாதபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் 42 .இவர் அந்த பகுதியில் நடந்து சென்றபோது 17 வயது சிறுவன் அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் முன்னூரை வழிப்பறி செய்து விட்டார் .இந்த சம்பவம் தொடர்பாக பிரபாகரன் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.
**********

மதுரை தபால்தந்திநகரில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

மதுரை தபால்தந்திநகரில்நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர் .குலமங்கலம் மையின் ரோடு என்.பி .நகரை சேர்ந்தவர் குரு தேவி 63 .இவர் தபால்தந்தி நகர் மெயின் ரோட்டில் நடந்து சென்றபோது பைக்கில் சென்ற 2 பேர் அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக குரு தேவி கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறித்த ஆசாமியை தேடி வருகின்றனர்.
********

மதுரை சர்வேயர் காலனியில் நடந்து சென்றவர் மீது மோதி பைக்கில் சென்றவர் பலி

மதுரை சர்வேயர் காலனியில் நடந்து சென்றவர் மீது பைக் மோதியதில் பைக்கை ஓட்டிச் சென்றவர்பலியானார். மதுரை அருகே வாவிடமருதூர் பூலாம்பட்டியைசேர்ந்தவர் நாகராஜன் 61 .இவர் சர்வேயர் காலனி 120 அடி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடந்த பாண்டி என்பவர் மீது மோதி விபத்தானது. இதில் பைக்கில்இருந்துதவறி விழுந்து படுகாயமடைந்த நாகராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*********

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக 10 லட்சம் மோசடி, கணவன் மனைவியிடம் போலீஸ் விசாரணை

மதுரை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக 10 லட்சம் மோசடி செய்ததாக கணவன் மனைவி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஜெய்ஹிந்துபுரம் ராமையா தெருவைச்சேர்ந்தவர் ராதா செல்லம்மாள் 43. இவரது மகனுக்கு விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ராமையா தெருவைச் சேர்ந்த சூரியபிரகாஷ் 34 மனைவி கோகிலவானி 30 இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு ரூபாய் பத்து லட்சம் பெற்றுள்ளனர்.ஆனால் சொன்னபடி, வேலை வாங்கி கொடுக்கவில்லை ஏமாற்றி விட்டதாககூறி கொடுத்தபுகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

******

மதுரை திருப்பரங்குன்றத்தில் ரயில் மோதி ஒருவர் பலி

மதுரை திருப்பரங்குன்றத்தில் வசித்து வருபவர் பழனிச்சாமி 47. இவர் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் பணியாற்றி வருகிறார் இன்று மதியம் மகளிர் காவல் நிலையம் எதிரே உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதியதாக கூறப்படுகிறது.  இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்து மதுரை இரும்புப் பாதை போலீசார் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து என விசாரணை செய்து வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தமிழக முதலமைச்சரிடம் விருது பெற்ற திருநெல்வேலி மாநகர காவல் துறை.

421 நெல்லை : சாலை பாதுகாப்பு Road Safety செயல்பாடுகளில் சிறந்த காவல் ஆணையராக திருநெல்வேலி மாநகர காவல்துறை தேர்வு செய்யப்பட்டு, மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விருதை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452