இன்றைய மதுரை கிரைம்ஸ் 12/03/2021

Admin

மதுரை அனுப்பானடியில்  உடம்பு வலிக்கு ஊசி போட்டுக் கொண்ட பெண் டாக்டர் திடீர் பலி போலீஸ் விசாரணை

மதுரை அனுப்பானடிபகுதியில் உடம்பு வலிக்கு ஊசி போட்டுக் கொண்ட பெண் டாக்டர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஹரிஹரனி 26 .இவர் மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்டி படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென்று உடல் வலி ஏற்பட்டது .இதற்காக ஊசி போட்டுக் கொண்டார் .தனது கணவர் அசோக்விக்னேஷ் ஊசியை போட்டுளளார். ஊசி போட்ட சில விநாடிகளிலேயே அவருக்கு வாந்தி ஏற்பட்டது. அதனால் மயங்கிய நிலையில் அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய தந்தை ரவீந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
********/*

மதுரை பைபாஸ் சாலையில் கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்

மதுரை பைபாஸ் சாலையில் கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பைபாஸ் ரோடு சொக்களிங்க நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் பழனி குமார் 48 இவர் கென்னட்ரோடு எழுபதடி ரோடு சந்திப்பில் சென்றபோது அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி அவர் வைத்திருந்த ரூபாய் ஆயிரத்தி முன்னூரை மூன்று வாலிபர்கள் பறித்துச் சென்றுவிட்டனர். இந்த வழிப்பறி தொடர்பாக பழனி குமார் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கார்த்திக் என்றகாதன் கார்த்திக் 32, கார்த்திக் என்ற சுடுதண்ணீர கார்த்திக் 30, மதன்குமார் 36 ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
**********/

ஜெய்ஹிந்த்புரத்தில் முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி மூதாட்டியிடம் நகை பறிப்பு

மதுரை ஜெய்ஹிந்து புரத்தில் முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜெய்ஹிந்துபுரம் சோலை அழகுபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் மரியலீலா 62. இவரிடம் அறிமுகமான மர்ம நபர்கள் முதியோர் பென்சன் வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். அதற்காக செலவு தொகை வேண்டும் என்று கேட்டுள்ளனர். இந்த நிலையில் வீரகாளியம்மன்கோவில் அருகே உள்ள மாடியில் உள்ள தனது கட்டிடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.அங்கு அந்த மூதாட்டி அவர்களிடம் இரண்டே முக்கால் பவுன் தங்க நகைகளை கொடுத்துள்ளார்.அவற்றைவாங்கிச் சென்ற அந்த நபர்கள் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர் .இது தொடர்பாக மரியலீலா ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
*********

கேகே நகரில் டாக்டரின் வீடு புகுந்து செல் பணம் திருட்டு போலீஸ் விசாரணை

மதுரை மார்ச் 12 ககே.கே.நகரில் டாக்டரின் வீடு புகுந்து பணம் செல்போன் திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.கேகே நகர் என்பதடிரோட்டில் கண்மருத்துவமனைநடத்திவருகிறார் டாக்டர் தீபா.இவர்வீடும் இங்குதான்உள்ளது .இவர் மருத்துவமனைக்கு சென்ற நேரம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் வீட்டில் இருந்த இரண்டு செல்போன்கள்,பணம் ரூபாய் ஐந்துஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக டாக்டர் தீபா அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
********

கருணாநிதியை அவதூறாக பேசியதாககமல்ஹாசன் மீது மதுரை வக்கீல் தேர்தல் கமிஷன் கமிஷனில் புகார்

மதுரை மார்ச் 12 மதுரை பழங்காநத்தம் கீழத் தெருவை சேர்ந்தவர் வக்கீல் ராமசுப்பிரமணியன் .இவர் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராகவும்,சட்ட பாதுகாப்பு குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அந்த புகாரில் கடந்த 9ஆம் தேதி சென்னையில் பிரசாரம் செய்த மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் தேர்தல் நடத்தை விதிமுறை மீறி கருணாநிதியையும் ஸ்டாலினையும் அவதூறாக பேசியுள்ளார் .தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள போது அரசியல் கட்சிகளை விமர்சனம் செய்யும்போது அந்த கட்சியின் கொள்கைகள் ,செயல் திட்டங்கள் ,கடந்த கால செயல்பாடுகள் பற்றிய விமர்சனங்கள் இருக்க வேண்டுமேதவிர பிற கட்சி தலைவர்களின் தொடர்பான தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்ற விதி முறை நடைமுறையில் உள்ளது. இவற்றை மீறி கமலஹாசன், கருணாநிதியை அவமதிப்பு செய்ய வேண்டுமென்றால் ஸ்டாலின் என்று சொன்னாலே போதும் என்று பேசியிருக்கிறார்.இந்தபேச்சு கருணாநிதி,ஸ்டாலின் இருவரையும் அவமானப்படுத்தியதற்கு சமம் ஆகும்‌ எனவே கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
************


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

யானை கட்டிப் போரடிக்கும் மதுரை - சங்க கால காட்சி; தற்போது சாட்சி

324 மதுரை : நெற்கதிர்களை மாடு கட்டி போரடிப்பதற்குப் பதிலாக தாங்கள் வளர்க்கின்ற செல்ல யானையை போரடிக்க பயன்படுத்தும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452