இன்றைய கோவை கிரைம்ஸ்

Admin

குப்பையை அகற்ற கூறியவருக்கு அடிஉதை மூவரிடம் விசாரணை

பாப்பநாயக்கன் பாளையம் பரமேஸ்வரன் பிள்ளை லே-அவுட் பகுதியைச் சேர்ந்த மாரப்பன் என்பவரின் மகன் ஆனந்தராஜ். இவரது வீட்டின் அருகில் குடியிருப்பவர் திருமேனி. திருமேனி  தனது வீட்டின் பின்புறம் குப்பைகளை அதிகளவில் குவித்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதை ஆனந்தராஜ் பலமுறை எடுத்துக் கூறியும்  அந்த குப்பைகளை அகற்ற வில்லை. இந்நிலையில் நேற்று மதியம் மீண்டும் ஆனந்தராஜ் திருமேனியிடம்  எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த திருமேனி மற்றும் அவரது நண்பர்கள் ரவி, செந்தில் ஆகியோர் ஆனந்தராஜ் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்தனர். தொடர்ந்து ஆனந்தராஜின் தாயாரிடம் தகராறு செய்ததோடு அங்கிருந்த உருட்டுக்கட்டையால் அவரை  தாக்கினர். இதில் ஆனந்தராஜின்  தாயாருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆனந்தராஜ் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published.

Next Post

குற்றத் தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

425 திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த களம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆரணி காவல் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452