இன்றைய கோவை கிரைம்ஸ் 19/02/2021

Admin

கள்ளக்காதலை தட்டிக்கேட்டவர் கத்தியால் குத்தி கொலை : முதியவர் கைது

பொள்ளாச்சி அடுத்த மாப்பிள்ளை கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த செல்லப்ப கவுண்டர் என்பவரின் மகன் தண்டபாணி (61). இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதை அடுத்து தண்டபாணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராணி என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது ராணியின் மகள் மலர்க்கொடி மற்றும் அவரது மருமகன் துரையன் ஆகியோருக்கு பிடிக்கவில்லை. இதனால் அடிக்கடி அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது .இந்நிலையில் நேற்று மாலை தண்டபாணி ராணியுடன் பேசிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த ராணியின் மகள் மலர் கொடியும் மருமகனும் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளனர் . இரு தரப்பினருக்கு இடையே தகராறு எழுந்தது. ஒருகட்டத்தில் மலர் கொடியையும் துரையனையும்  கைகளால் தாக்கிய தண்டபாணி மறைத்து வைத்திருந்த கத்தியால் துரையன்  நெஞ்சில் குத்தினார் . இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் துரையன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மலர்கொடி அளித்த புகாரின் பெயரில் தண்டபாணியை  வடக்கிபாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


காதலர்களை வழிமறித்து தாக்கியவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகள் பிரியதர்ஷினி (19). இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார் .இதற்காக இவர் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்து பணிக்கு சென்று வருகிறார். இவர் வீரமணி என்ற நபரை கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வருகிறார். நேற்று மாலை பிரியதர்ஷினியும் , வீரமணியும் டவுன்ஹால் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் இருவரையும் வழிமறித்து நீ ஏன் மாற்று  மத நபருடன் சுற்றி கொண்டிருக்கிறாய் என்று கூறி பிரியதர்ஷினியை  மிரட்டினார். மேலும் வீரமணியை நீ யார் என விசாரித்ததோடு கைகளால் தாக்கியுள்ளார். இதையடுத்து பிரியதர்ஷினி வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பிரியதர்ஷினி யையும் வீரமணியும் மிரட்டி தாக்கிய  நபர் சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த அப்துல் லத்தீப் என்பவரின் மகன் நாசர் அலி  (38) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் .


கோவையில் வாலிபரிடம் பணம், செல்போன் கொள்ளை 3 பேருக்கு வலை வீச்சு

கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள சின்னவேடம்பட்டி குப்புசாமி லேஅவுட்டை சேர்ந்தவர் யோகநாதன் இவரது மகன் வீரப்பன் வயது 32 நேற்று இரவு இவர் அங்குள்ள மணி நகரில் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 3 ஆசாமிகள் இவரை வழிமறித்து மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் பணம் ரூ 18 ஆயிரத்து 480 ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர்,  வீரப்பன் தனது நண்பர் ஆனந்த் உதவியுடன்  அவரது பைக்கில் அந்த கொள்ளையர்களை துரத்திச் சென்றார் நல்லாம்பாளையம் அருகே சென்றபோது செல்போனையும் பைக்கையும் கீழே போட்டுவிட்டு 3 பேரும் தப்பி ஓடி விட்டனர் அவர்களின் பைக்கையும் செல்போனையும் எடுத்துக்கொண்டு வீரப்பன் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கோவையில் தீக்குளித்து பெண் தற்கொலை

கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சேகர் இவரது மனைவி கவிதா ( வயது 27. ) இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது.

திருமணமான 5-வது மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் கார்த்திகா அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார் கார்த்திகா மன அழுத்தத்துடன் காணப்பட்டார் இந்த நிலையில் கடந்த 31 ஆம் தேதி படுக்கை அறையில் வைத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் இதில் உடல்முழுவதும் கருகியது சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு கார்த்திகா இறந்தார் இதுகுறித்து அவரது தந்தை வைரசாமி செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவையிலிருந்து  நமது நிருபர்

A. கோகுல்

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காவல்துறையினர் எந்த சூழ்நிலையில் வாரண்ட் இன்றி கைது செய்யலாமா?

318 காவல்துறையினர் எந்த சூழ்நிலையில் வாரண்ட் இன்றி கைது செய்யலாம் என்பதை சட்பபிரிவு 41crpc யில் தெளிவாக அதிகாரம் வழங்கியுள்ளது . அதில் பணிசெய்வதை தடைசெய்தாலும் கைது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452