இன்றைய கோவை கிரைம்ஸ் 06/03/2021

Admin

கோவையில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 கொள்ளையர் கைது

கோவை சிங்காநல்லூர் கோத்தாரி நகரைச் சேர்ந்தவர் காசி இவரன் மகன் முருகன் வயது 31 கூலி தொழிலாளி இவர் நேற்று மாலை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்து நின்றார்

அப்போது அந்த வழியாக வந்த 2 ஆசாமிகள் இவரிடம் பணம் கேட்டனர் அவர் கொடுக்க மறுத்தார் இதனால் அவர்களில் ஒருவன் கத்தியை காட்டி மிரட்டினான்.  மற்றொருவன் முருகேசன் சட்டை பையில் இருந்த 2000 ரூபாயை எடுத்தான்.  உடனே அவர் சத்தம் போட்டார் கத்தியை காட்டி மிரட்டி விட்டு அந்த ஆசாமிகள் தப்பி ஓடிவிட்டனர் இது குறித்து முருகன் சிங்காநல்லூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் துளசியம்மாள் லேஅவுட்டை சேர்ந்த ஆனந்தராஜ் என்ற ஹேப்பி ஆனந்த் வயது26 தினேஷ் பாபு வயது 27 ஆகியோரை கைது செய்தனர்: பணம் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் விசாரணை நடந்து வருகிறது.

கோவையில் திருடும் போது கையும் களவுமாக பிடிபட்ட 2 கொள்ளையர் கைது

கோவை வடவள்ளி மருதமலை ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் தமிழ்ச்செல்வன் வயது 23. இவர் அங்குள்ள லட்சுமிபுரத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். வீடு கட்டுவதற்காக  வைத்திருந்த கட்டுமான பொருட்களை நேற்று இரவில் 2 பேர் திருடினார்கள். அவர்களை தமிழ்ச்செல்வன் அங்குள்ள பொதுமக்கள் உதவியுடன் கையும் களவுமாக பிடித்து ,வடவள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி அந்த இருவரையும் கைது செய்தார். விசாரணையில் அவர்கள் தொண்டாமுத்தூர் பக்கம் உள்ள புதூர் புது காலனியை சேர்ந்த தங்கராஜ் வயது 27 திவாகர் வயது 23 என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து ரூ 15 ஆயிரம் மதிப்புள்ள கட்டுமான பொருட்கள் கைப்பற்றப்பட்டது மேலும் விசாரணை நடந்து வருகிறது.


கோவையிலிருந்து  நமது நிருபர்

A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கோவை தோ்தல் பணி:21,500 பணியாளா்களுக்கு மாா்ச் 14இல் பயிற்சி

316 கோவை: கோவையில் தோ்தல் பணியில் 21,500 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இவா்களுக்கு வரும் 14 ஆம் தேதி, முதல் கட்ட தோ்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452