மதுரையில் இன்று நடைபெற்ற முக்கிய கிரைம்ஸ்

Admin

மேலூர் அருகே தனியாக வீட்டில் இருந்த பெண் பலாத்காரம் உறவினர் கைது

மதுரை மாவட்டம், மேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற உறவினரை போலீசார் கைது செய்தனர். மேலூர் அருகே உள்ளது கிடாரிப்பட்டி கிராமம் எங்கு வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை அதே பகுதியை சேர்ந்த உறவினர் அழகேசன் 40 என்பவர் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் அந்தப் பெண் கூச்சல் போடவே அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மேலூர்
அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் செய்தார் வழக்குப்பதிவு செய்த போலீசார் பலாத்காரம் செய்ய முயன்ற அழகேஷ் 40 என்பவரை கைது செய்தனர்.
*******


மதுரை பைபாஸ் ரோட்டில் பணப் பிரச்சனை காரணமாக மனமுடைந்த வாலிபர் விஷம் தின்று தற்கொலை

மதுரை பைபாஸ் ரோட்டில் பணப் பிரச்சினை காரணமாக மனம் உடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மதுரை பைபாஸ் ரோடு நேர் நகரை சேர்ந்தவர் பிச்சை பிள்ளை மகன் குமரேசன் 39 .இவருக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் பண பிரச்சனை இருந்து வந்தது. இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்த குமரேசன் வீட்டில் விஷம் தின்று மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் குமரேசன் பரிதாபமாக உயிர் இழந்தார். இவரது தற்கொலை குறித்து மனைவி காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
******


ஆரப்பாளையத்தில் டாஸ்மாக் பாருக்குள் புகுந்து சூறை ஆசாமிகளுக்கு வலைவீச்சு

மதுரை, ஆரப்பாளையத்தில் டாஸ்மாக் பாருக்குள் புகுந்து சூறையாடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். தத்தனேரி அருள்தாஸ் புரத்தை சேர்ந்தவர் விஜயபாபு 36 .இவர்ஆரபாளையம் ஏ.ஏ.ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். ஏற்கனவே அங்கிருந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் குடிபோதையில் விஜயபாபுவுடன் உடன் தகராறு செய்தனர்.அவர்கள் அங்கிருந்த பீர் பாட்டிலை உடைத்து அவரை தாக்கி விட்டு அங்கிருந்த மேஜை நாற்காலிகளை சூறையாடி விட்டு ஓடி விட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக விஜயபாபு கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பாரில் மேஜைநாற்காலிகளை சூறையாடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


மதுரையிலிருந்து நமது நிருபர்


திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மதுரையில் கட்டிடம் இடிந்து 3 பேர் பலி: திடீர் நகர் தீயணைப்பு குழுவினர்  விரைவு

623 மதுரை : மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மேலவடம் போக்கி தெருவில் உள்ள வாசுதேவன் என்பவருக்கு சொந்தமான சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452