ஆரம்பமே அதிரடியால் அசத்தியுள்ள கோவை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்

Admin

கோவை  : பணம் வசூல் புகாரையடுத்து உளவுத்துறை போலீசார் 7 பேரை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் அதிரடியாக உத்தர விட்டார்.கோவை போலீஸ் கமிஷனராக  தேர்தல் ஆணையத்தால் புதிய போலீஸ் கமிஷனராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப் பட்டார்.அவர் பொறுப்பேற்ற உடன் முறைகேடான செயல்கள், கட்டப்பஞ்சாயத்து, வசூல் வேட்டை உள் ளிட்ட செயல்களில் ஈடுபடும் போலீசார் குறித்து பட்டியல் சேகரித்தார்.

அதில், உளவுத்துறை யில் பணியாற்றும் போலீ சார் அதிகளவில் பணம் வசூலில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்தார். பெரியகடை வீதி, ரேஸ் கோர்ஸ், சரவணம்பட்டி, குனியமுத்தூர், போத்த னூர், சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய உளவுத்துறையில் பணியாற்றி வந்த 7 பேர் மீது அதிக அளவில் புகார் எழுந்தது.இவர்களில் சிலர் ஒரே காவல் நிலைய உளவுத்துறையில் 10 ஆண்டுகளுக் கும் மேலாக பணியாற்றி உள்ளனர். இவர்கள் அந்தந்த ஸ்டேஷன்களில் ஒரு உயர் அதிகாரியை போல செயல்பட்டு வந்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது. குறிப்பாக சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த உளவு பிரிவு தலைமை காவலர் ரங்கநாதன் மீது போலீசார் பலர் புகார் அளித்து இருந்தனர். ரங்கநாதன் ஏற்கனவே போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கு கடந்த ஆண்டே மாற்றப்பட்டார்.ஆனால் அவர் அங்கு செல்லாமல் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் பணி புரிந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதையடுத்து 15 காவல் நிலை பணியாற்றி வந்த 7 பேரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கோவை போலீஸ் கமிஷ்னர் டேவிட்சன் ஆசிர்வாதம் அதிரடியாக உத்தரவிட்டார்.மேலும் போலீசாரின் நடவடிக்கைகள் கண் காணிக்கப்பட்டு வருவதாகவும், பணம் வசூல் உள்ளிட்ட முறை கேட் டில் ஈடுபடும் போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக் கபடும் என போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வா தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தமிழக கேரள எல்லை சோதனைச்சாவடி மாற்றம்

578 தேனி : தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியான குமுளியில் காவல்துறை சோதனைச்சாவடி இடமாற்றம் செய்யப்பட்டு, போடி மெட்டு, கம்பமெட்டிலும் கூடுதலாக மத்தியதொழில் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452