தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மனைவியை கல்லால் தாக்கி காயப்படுத்திய கணவரை ஆண்டிபட்டி போலீசார் கைது சொய்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டி, இங்குள்ள நடுத்தெருவைச்சேர்ந்தவர்பாண்டியன் மகன் ரமேஷ் (40), இவரது மனைவி பஞ்சு(35).இருவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை, இதனால் கணவன் ரமேஷ் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதை மனைவி பஞ்சு கண்டிப்பாராம், இதில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
சம்பவ நாளன்று வழக்கம்போல் ரமேஷ் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார், மனைவி பஞ்சு தட்டி கேட்க ஆத்திரமடைந்த ரமேஷ் கீழே கிடந்த கல்லை எடுத்து மனைவி பஞ்சு வை தாக்கினாராம். இதில் முன் நெற்றியில் பலத்த காயமடைந்தார்.அருகேயுள்ள வர்கள் இவரை தடுக்க முயலும் போது அவர்களையும் ஆபாசமாக பேசி கல்லால் தாக்க முயன்றார். இது பற்றி பஞ்சு ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.
தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.குருசாமி