ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை – மகிழ்ச்சியில் திருமண வீடு

Admin

சென்னை : சென்னை, குரோம்பேட்டையில் வசிக்கும் பால் பிரைட் என்பவரின் மகளுக்கு குரோம்பேட்டை, அன்னை சர்ச்சில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் தனது வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார் . வீட்டில் இறங்கிய போது, ஆட்டோவில் தனது மகளின் 50 சவரன் தங்க நகைகள் அடங்கிய கைப்பையை தவற விட்டு சென்றுள்ளார். இது குறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் திரு. சரவண குமார் தன் ஆட்டோவில் தவறவிட்ட நகைகளை அரை மணி நேரத்தில் காவல்துறையினரிடம் வந்து ஒப்படைத்தார். சரவணகுமாரின் நேர்மையை காவல்துறையினர் வெகுவாக பாராட்டினர். திருமண வீட்டார் ஆனந்த கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ஆடு திருடிய 2 நபர்கள் கைது

388 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் 31.01.2021 சிவகங்கை அருகே பில்லூர் பகுதியை சேர்ந்த இந்திராணி என்பவர் வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை அடையாளம் தெரியாத […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452