அவதூறு பரப்பினால் காவல்துறை தன் கடமையை செய்யும், DGP சைலேந்திரபாபு எச்சரிக்கை

Admin

நவீன அறிவியல் வளர்ச்சியின் முக்கிய அங்கமாக விளங்கும் சமூக வலைதளங்கள் மற்றும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகங்கள் பத்திரிகைகள் வாயிலாக பலரும் சமுதாயம் அரசியல் உள்ளிட்டவை சார்ந்த ஆக்கபூர்வமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், சிலர் சுய விளம்பரத்திற்காக ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் அருவருப்பான மற்றும் அவதூறு செய்திகளை பதிவு செய்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை தூண்டி வருகின்றனர். அதிலும் குறிப்பிட்ட சிலர் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சொந்த ஆதாயத்திற்காகவும், மக்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்ற எண்ணத்திலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும், தொடர்ந்து மலிவான, தரம் தாழ்ந்த, கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

இத்தகைய அநாகரிகமான பதிவுகள் பொது அமைதியை சீர்குலைக்கும் குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றன. காவல் துறையை பொருத்தவரை சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், கட்சி, சாதி, மதம் சார்ந்த இரு தரப்பினருக்கு இடையே மோதல்களை தூண்டும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலு, குற்றச் செயல்களை ஊக்குவிக்கும் வகையிலும், அமைந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அத்தகைய சட்ட நடவடிக்கைகள் காலம் காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு மே மாதம் முதல் தற்போது வரை மாநிலம் முழுவதும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட நபர்கள் மீது 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் எல்லை மீறிய அளவில் பதிவுகள் மேற் கொண்ட நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துக்கள் பொது அமைதிக்கும் சட்ட ஒளிந்திருக்கும் குந்தகம் ஏற்படுத்தும் சூழ்நிலையிலும் அவதூறு செய்தி பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகாரில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே காவல்துறையினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காவலர் உட்பட 5 பேருக்கு ஊக்க தொகை அறிவித்துள்ள முதல்வர்

4,745 ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக உள்ளன. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள 26 இந்திய […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452