அயராத காவல் பணியிலும் சாலையை சீரமைத்த திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல்துறையினர்

Admin
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாயுடுபுரம் அருகே தற்போது பெய்த கனமழை காரணமாக சாலைகள் சேதமடைந்து விபத்து ஏற்படும் வகையில் இருந்தது. இதனை கொடைக்கானல் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு.ரமேஷ் ராஜா, திரு.நீலமேகம் அவர்கள் முதல் நிலை காவலர் திரு.சிவராமன், திரு.வடிவேல் மற்றும் காவலர் திரு.சந்துரு ஆகியோர் இணைந்து மேடாக இருந்த இடத்தில் உள்ள மண்ணை எடுத்து சாலையில் உள்ள குழிகளை மூடி சீரமைத்தனர். காவல்துறையினரின் இச்செயலை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

எஸ்.எஸ்.காலனி, திருமங்கலம், அலங்காநல்லூர் காவல் நிலையங்களில் பதியப்பட்ட முக்கிய வழக்குகள்

872 மதுரை பொன்மேனியில் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக கணவர் தூக்குப்போட்டு தற்கொலை மதுரை: மதுரைபொன்மேனியில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர்தூக்குப்போட்டு தற்கொலை செய்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452