அத்துமீறலில் ஈடுபட்ட நபர், அசோக் நகர் மகளிர் காவல் துறையினரால் கைது

Admin

சென்னை: தி.நகர் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமியை காணவில்லை என்று சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில், W – 26 அசோக்நகர் நகர் மகளிர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு , சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வினோத் , (24)  என்பவரை பிடித்து விசாரணை செய்தனர் .

விசாரணையில் , வினோத் நெசப்பாக்கம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வரும் போது மேற்படி சிறுமியை சந்தித்து காதலித்து கடந்த 16.01.2021 அன்று மேற்படி சிறுமியை தனது பாட்டி ஊரான வந்தவாசிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டு , பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது . அதன்பேரில் , W – 26 அசோக்நகர் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் POCSO சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து எதிரி வினோத்தை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார் .

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தலைமறைவாகியிருந்த பெண் குற்றவாளி ஆவடி காவல் துறையினரால் கைது

549 சென்னை : சென்னை , திருவல்லிக்கேணி , பகுதியை சேர்ந்த பிரகாஷ் , (31) என்பவர் கடந்த 10.10.2019 ம் ஆண்டு ஆவடி டேங்க் பேக்டரி […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452