நிலம் தகராறு, இளம் பெண் கொலை, DSP சந்திரகாசன் விசாரணை

Admin

திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 27வது வார்டு தெருவில் வசிப்பவர் லோகநாயகி வெங்கடாஜலபதி. லோகநாயகிக்கும் அவரது சகோதரிக்கும் குடியிருப்பு நிலம் சம்பந்தமாக பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்தது.

இந்த நிலையில் நிலம் சம்பந்தமாக இன்று காலை லோகநாயகி வெங்கடாஜலபதி குடும்பத்தினருக்கும், சரஸ்வதி பாலசந்தர் குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியதில், சரஸ்வதி குடும்பத்தினர் மீது வழக்கு கொடுக்கப் போவதாக தெரிவித்ததை அடுத்து, ஆத்திரமடைந்த சரஸ்வதியின் கணவர் பாலச்சந்தர் வயது39, லோகநாயகி மகள் சிவரஞ்சனி ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் நிலையில், சிவரஞ்சினியின் சித்தப்பா பாலச்சந்திரன் என்பவருக்கும், லோகநாயகி குடும்பத்தினருக்கும் இடையே வீடு நிலம் சம்பந்தமாக பிரச்சனை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாலச்சந்தர் இன்று காலை திருவள்ளூர் அடுத்த பெரிய குப்பத்தில் சிவரஞ்சினி என்கிற ஐடி ஊழியரான இளம்பெண் கத்தியால் 7 இடங்களில் கொடூரமாக குத்தி உள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சிவரஞ்சினி மீட்டு, திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் நிலையத்தில் பாலச்சந்தர் மீது புகார் அளித்ததன் பேரில், வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் சரக துணை கண்காணிப்பாளர் சந்திரகா5சன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப் படுகின்றது. இது வீட்டுமனை பிரச்சனையால் இந்த கொலையை அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஏழுமலை

Leave a Reply

Your email address will not be published.

Next Post

3.5 கோடி மதிப்பிலான Ambergris எனப்படும் திமிங்கலத்தின் கழிவினை கடத்தி வந்த இருவர்

560 தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் , சார்பு ஆய்வாளர் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452