“தமிழகத்தின் தீரன்” ரியல் ஹீரோ ஜாங்கிட் ஐ பி எஸ் பணி ஓய்வு

Admin

1985ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான திரு.ஜாங்கிட், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி எஸ்.பி.யாக பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று நீலகிரி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் எஸ்.பி.என பணியாற்றி வந்த அத்தனை காவல்துறை பதவிகளிலும் தனக்கென்று தனி முத்திரை பதித்த திரு.ஜாங்கிட் ஐ.பி.எஸ். ஜூலை 31ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

பின்னர் டிஐஜியாக 1999-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று மதுரை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, தஞ்சாவூர் சரகங்களில் பணியாற்றினார். பின்னர் மதுரை, திருநெல்வேலி நகர ஆணையராக பணியாற்றியுள்ளார்.

திரு.ஜாங்கிட், ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்.

வடக்கு மண்டல, ஐ.ஜி.இயாக இருந்தபோது, 2001ல் தமிழகத்தில் ஊடுருவி, கும்மிடிப்பூண்டி, எம்.எல்.ஏ.வாக இருந்த, சுதர்சன் உள்ளிட்டோரை கொலை செய்த, உ.பி., மாநில பவாரியா கொள்ளை கும்பலை ஒழித்தார். சென்னை கூடுதல் ஆணையர் மற்றும் புறநகர் ஆணையராக பணிபுரிந்தபோது, ரவுடிகள், ‘பங்க்’ குமார், வெள்ளை ரவி ஆகியோரை எண்கவுன்டர் செய்தார்.

இவர் பவாரியா கொள்ளை கும்பலை எதிர்கொண்ட விதம் குறித்து, இளம் இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான தீரன் அதிகாரம் ஒன்று படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் ஹீரோ கார்த்தி ஆக இருந்தாலும், இந்த கதையின் ரியல் ஹீரோ ஜாங்கிட் ஐ பி எஸ் தான்.

ஓய்வு பெற்ற பின், தன் சொந்த ஊரில், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பயிற்சி மையங்கள் துவங்கி ஏழை, எளிய மாணவர்களுக்கு பயிற்சி அளிகக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழக காவல் துறையில் பணியாற்றியதை பெருமையாக கருதுவதாக கூறியுள்ளார்.

தற்போது கும்பகோணம் போக்குவரத்து விஜிலென்ஸ் அதிகாரியாக உள்ள ஜாங்கிட், ஜூலை 31யுடன் பணிஓய்வு பெறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பதவி ஏற்ற 20 நாட்களில், நெல்லை மக்களின் மனதை கவர்ந்த காவல் துணை ஆணையர் திரு.சரவணன்

238 நெல்லை: பதவி ஏற்ற இருபது நாட்களில், நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்குக்கில் சிறப்பாக செயல்பட்டது, போக்குவரத்தை மாற்றங்களை புகுத்தியது, போதை தடுப்பு நடவடிக்கையாக குற்றவாளிகள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452