விருதுநகரில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு

Admin

விருதுநகர்: விருதுநகர் மேற்கு காவல் நிலையம் சார்பாக நடைபெற்ற சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. தியாகராஜன் அவர்கள் கலந்துகொண்டு பர்மா காலனி, அய்யனார் நகர், மற்றும் யானைக்குழாய் தெரு பகுதி பொதுமக்களுக்கு சாலை போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

மனநலம் பாதித்தவரை குடும்பத்தினரிடம் ஒப்படைத்த விருதுநகர் காவல்துறையினர்

Admin

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.வெங்கடேசன் அவர்கள் ரோந்து பணி மேற்கொண்டபோது, ஆவியூர் to அருப்புக்கோட்டை ரோட்டில் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றிக் கொண்டிருந்த ராஜேந்திரன் என்பவரை மீட்ட அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை காவல்துறையினர் உதவி ஆய்வாளர் திரு.வேல்முருகன், தலைமைகாவலர்கள் திரு.செல்வகுமார், திரு.கருப்பசாமி, முதல் நிலை காவலர்கள் திரு.கோபிநாத், திரு.வெள்ளைச்சாமி மற்றும் காவலர் திரு.தனப்பாண்டி ஆகியோர் மூலமாக ராஜேந்திரன் பற்றி விசாரணை மேற்கொண்டு, அவரது சொந்த ஊரான […]

விருதுநகர் மாவட்டத்தில் கவனக்குறைவாக லாரியை இயக்கி விபத்து செய்தவரை காவல்துறையினர் கைது

Samson

விருதுநகர் மாவட்டம்: 01.10.2019* ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட T.P. மில் ரோட்டில் உள்ள கனரா பேங்க் ATM அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த *ராஜபாளையம் தர்மபுரம் தெருவை சேர்ந்த ஜெகதீஷ்குமார் ராஜா (60)* என்பவர் மீது அவ்வழியே லாரியில் வந்த *கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன்* என்பவர் கவனக்குறைவாக லாரியை இயக்கி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து ஜெகதீஷ்குமார் ராஜா உறவினர் *சத்தியநாராயணன்* காவல் […]

கொலை வழக்கில் தண்டனை பெற்று தந்த விருதுநகர் காவல்துறையினர்

Admin

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி காவல் நிலையம், 2010 ஆம் ஆண்டு செபாஸ்டியன் என்பவர் அவரது மனைவி மோட்சம் என்பவரை கொலை செய்தார். இதைத்தொடர்ந்து கூமாபட்டி காவல் துறையினர் குற்ற எண்.95/2010 u/s.302 IPC பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து செபஸ்டியனை கைது செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 26.09.2019 அன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள், செபஸ்டியனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் […]

விருதுநகரில் ஒரே நாளில் 4,262 வழக்குகள் பதிவு

Admin

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ஒரே நாளில் 4,262 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு ரூ.3.92 லட்சம் அபராதத் தொகையாக செய்யப்பட்டது. போக்குவரத்து விதிமுறை மீறல்களைத் தடுக்கவும், விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.M.ராஜராஜன் B.E., அவர்கள் உத்தரவின்படி, கடந்த 2 நாட்களாக விருதுநகர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதியிலும், காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 2 […]

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற காவலருக்கு விருதுநகர் SP பாராட்டு

Admin

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டம் 19.09.2019 தமிழக அளவில் நடைபெற்ற 2019-ம் ஆண்டிற்கான துப்பாக்கி குண்டு சுடும் போட்டி கடந்த 11.9.2019-ம் தேதி முதல் 13.9.2019-ம் தேதி வரை சென்னை ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ படை துப்பாக்கி குண்டு சுடு தளத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு காவல் துறை சார்பாக விருதுநகர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரியும் திரு. மு.முத்துக்குமார் அவர்கள் கலந்துகொண்டு 50 கஜம் ஸ்னாப் சூட்டிங் கார்பைன் துப்பாக்கி பிரிவில் […]

விருதுநகரில் மணல் கொள்ளையில் ஈடுப்பட்ட நபர்களை காவல்துறையினர் கைது

Admin

விருதுநகர்: மாவட்டம் 23.08.2019 ஆவியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வினோபாநகர் பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. தமிழழகன் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் ஆவியூர் வினோபா நகரில் உள்ள ஊர்காவலன் கோயில் அருகில் இரண்டு லாரிகளில் மணல் கடத்தி வந்த தூத்துக்குடி மாவட்டம் பழனியப்பபுரத்தை சேர்ந்த ஜெயராஜ்(40) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் பூசனூரைச் சேர்ந்த கன்னிசாமி(35) ஆகிய இருவரையும் […]

விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் நற்சான்றிதழ் பெற்ற காவல் சார்பு ஆய்வாளருக்கு பாராட்டுக்கள்

Admin

விருதுநகர்: 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. A. சிவஞானம் அவர்கள், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. M.ராஜராஜன் அவர்கள் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்ததோடு, காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.மேலும் காவல்துறையில் சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் காவல் சார்பு ஆய்வாளர் திரு.அசோக் […]

விருதுநகரில் காவல்துறையினர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

Admin

விருதுநகர்: மாவட்டம் மாரனேரி காவல் நிலையம் சார்பாக AVM பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கல்வி, ஒழுக்கம், பெற்றோரின் முக்கியத்துவம் ஆகிய தலைப்புகளில் காவல்நிலைய ஆய்வாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் வழிகாட்டுதலின்படி, உதவி ஆய்வாளர்கள் திரு. ஆதீஸ்வரன் அவர்கள் மற்றும் திரு. மாரியப்பன் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியருக்கு அறிவுரைகளை வழங்கினர்.மேலும் நிகழ்ச்சியில் தன்னம்பிக்கை வளர்க்கும் விதமாக சிறப்பாக பேசிய மாணவ,மாணவியருக்கு பரிசு பொருட்களை வழங்கி […]

சிறுமி வன்புணர்வு குற்றவாளிகளுக்கு 20 வருடம் சிறை தண்டனை பெற்று தந்த விருதுநகர் காவல்துறை

Admin

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த சிறுமியை, அதே பகுதியில் வசித்து வந்த விஜய் என்ற விஜயகுமார்(25), ஆனந்த்(22) மற்றும் காளிராஜ்(23) ஆகிய மூன்று நபர்கள் பாலியல் வன் கொடுமை செய்ததாக சிறுமியின் தாயார் 09.10.2015 அன்று கொடுத்த புகாரை தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் திருமதி விஜயா அவர்கள் வழக்குப்பதிவு செய்தார். விஜய் என்ற விஜயகுமார், ஆனந்த் மற்றும் காளிராஜ் […]

Bitnami