சென்னை காவல்துறையினருக்கு கிடைத்த ஸ்காட்ச் தங்க விருதிற்கு தமிழக முதல்வர் பாராட்டு

Admin

புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு நேரடி அபராத பணப்பரிவர்த்தனையற்ற E-Challan முறையை அறிமுகப்படுத்தியதற்காக வழங்கப்பட்ட “ஸ்காட்ச் தங்க விருதினை” மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ. கே. விஸ்வநாதன், IPS அவர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றார்.   சென்னை காவல்துறைக்கு மத்திய அரசின் 2 ‘ஸ்கோச்’ விருதுகள்

5 போலீசாருக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு

Admin

சென்னை : கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 போலீசாருக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்பட உள்ளது. அதன்படி, (1) திரு.சந்திரமோகன், காவல் ஆய்வாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, திருப்பூர் மாவட்டம், (2) திரு.ராஜசேகரன், காவல் ஆய்வாளர்,மத்திய புலனாய்வுப் பிரிவு, திருச்சி, (3) திரு.பூங்கோதை, காவல் ஆய்வாளர், பண்ருட்டி காவல் நிலையம், கடலூர், (4) திரு.எஸ்.ஐ. என்.அழகிரி, காவல் உதவி ஆய்வாளர், மத்திய புலனாய்வு பிரிவு, விழுப்புரம் மாவட்டம், (5) திரு.பார்த்திபநாதன், […]

காவலர்களை உற்சாகமூட்டும் விதமாக, போலீஸாரைப் பாராட்டி டிஜிபி திரிபாதி கடிதம்

Admin

சென்னை:  ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் இரண்டு நாட்களுக்கு முன் போலீஸார் பணியைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டது.தற்போது தமிழ்நாடு காவல்துறையின் உயரிய பொறுப்பில் இருக்கும் டிஜிபி திரிபாதி காவலர்களை உற்சாகமூட்டும் விதமாக இரண்டு பக்க கடிதத்தை பாராட்டுச் சான்றிதழாக வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள பாராட்டுச் சான்றிதழ். பெருமைமிக்க தமிழ்நாடு காவல்துறை அனைத்து சவால்களையும் பணித்திறத்துடனும், விடாமுயற்சியுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் எதிர்கொண்டு வந்து இருக்கின்றது. 48 நாட்கள் நீடிக்கும் அத்திவரதர் […]

226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு சைபர் கிரைம் நுணுக்கங்கள் பயிற்சி

Admin

தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் தற்போது பயிற்சியில் இருந்து வரக்கூடிய 226 தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்களுக்கு காவல்துறை கூடுதல் இயக்குநர்கள் திரு.கந்தஸ்வாமி¸ இ.கா.ப.¸ திரு.வெங்கடராமன்¸ இ.கா.பா.¸ மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் திரு.விக்ரமன்¸ இ.கா.ப.¸ திரு.சசாங்சாய்¸ இ.கா.ப. மற்றும் திருமதி. சண்முகபிரியா ஆகியோர்கள் சைபர் கிரைம் பற்றிய நுணுக்கங்களையும்¸ முந்தைய வழக்குகளில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைமுறைகளையும் எடுத்துக் கூறி இனிவரும் காலங்களில் காவல்துறையில் சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கவும் பயிற்சி அளித்தனர். மேலும் […]

பளுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்ற உதவி ஆய்வாளர் திருமதி.அனுராதா முதல்வரிடம் வாழ்த்து

Admin

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2019 ஆண்டுக்கான காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தோகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.அனுராதா மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காவல் உதவி ஆய்வாளர் திருமதி.அனுராதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

“தமிழகத்தின் தீரன்” ரியல் ஹீரோ ஜாங்கிட் ஐ பி எஸ் பணி ஓய்வு

Admin

1985ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான திரு.ஜாங்கிட், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி எஸ்.பி.யாக பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று நீலகிரி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் எஸ்.பி.என பணியாற்றி வந்த அத்தனை காவல்துறை பதவிகளிலும் தனக்கென்று தனி முத்திரை பதித்த திரு.ஜாங்கிட் ஐ.பி.எஸ். ஜூலை 31ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். பின்னர் டிஐஜியாக 1999-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று […]

குற்றவாளிகளின் வீட்டு செல்ல பிராணியை பராமரித்து வரும் காவல்துறையினரின் ஈர நெஞ்சம்

Admin

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோகர் அகிர்வார். இவர் தனது 2 மகன்களுடன் சேர்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலை செய்துள்ளார். 5 பேரை கொலை செய்த வழக்கில் காவல்துறையினர், மனோகர் மற்றும் அவரது 2 மகன்களை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் மூவரை தவிர அவர்கள் வளர்த்த செல்லப்பிராணியான நாயும் இருந்துள்ளது. வீட்டை பூட்டிவிட்டு காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர். முதலில் […]

இந்திய கடலோர  காவல் படையில் DGP யாக கே.நடராஜன் நியமனம்

Admin

இந்திய கடலோர  காவல் படையில் புதிய இயக்குநராக கே.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.  தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன், மும்பை மேற்கு மண்டல கடலோர காவல்படையின் கூடுதல் இயக்குநராக பணியாற்றி வந்தார். தற்போது, அவர் மும்பை மேற்கு பிராந்திய ADGP யாக பணியாற்றி வரும் கே.நடராஜன் வரும் ஜூலை 1 முதல் பதவியில் DGP யாக  தொடர்வார் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது. தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமிக்கப்பட்டிருப்பது நம் தமிழகத்திற்கு கிடைத்த பெரும் சிறப்பாகும்.   […]

தமிழகத்தில் 17 கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்தார் டிஜிபி

Admin

தமிழகத்தில் 17 கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். வேதரத்தினம், ஸ்ரீனிவாச பெருமாள், இளங்கோ, வனிதா, கோபி, சுஜாதா, முகிலன், பாஸ்கரன், அனிதா, முத்துக்கருப்பன், என்.குமார், பாரதி, ரவி, லாவண்யா, ரமேஷ், பாபு, ராமமூர்த்தி, டி.குமார் ஆகியோர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

பொன்மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்

Admin

சென்னை: சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில் தலைமைச் செயலர், உள்துறை செயலாளர், அமைச்சர், டி.ஜி.பி. விசாரணைகளில் தலையிடுவதாக குற்றம் சாட்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்றம் உத்தரவிட்டும் தேவையான காவலர்கள்இ வாகன வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தரவில்லை எனவும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Bitnami