கம்பம் காவல்துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்

Admin

தேனி: கம்பம் போக்குவரத்து காவல் நிலையம் சார்பாக டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் கம்பம் நகர் சிக்னல் அருகில் நடைபெற்றது இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி அவர்கள் தலைமையிலான போலீசார்களால் அப்பகுதி பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதில் 4,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிலவேம்பு குடிநீர் அருந்தி பயன்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளித்து மகிழ்ந்த தேனி போலீசார்.

Admin

தேனி :  தேனி மாவட்டம்,  கம்பம் வடக்கு காவல் நிலையம் மற்றும் கூடலூர் வடக்கு காவல் நிலையம் இணைந்து DSP திரு.சின்னகண்ணு  அவர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி, சார்பு ஆய்வாளர்கள் திரு.வினோத்ராஜா, திரு.திவான்மைதீன், திரு.மணிகண்டன் மற்றும் போலீசார்கள் கம்பம் பகுதியில் அமைந்துள்ள நேதாஜி ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள 50 குழந்தைகளுக்கு இரவு உணவு மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் வழங்கப்பட்டது.    

கனரக வாகன உரிமையாளர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

Admin

தேனி: தேனி, கம்பம் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கம்பம் நகர்ப்பகுதி கனரக வாகன உரிமையாளர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் திரு.வினோத்ராஜா, திரு.மணிகண்டன் ஆகியோர்கள் வாகன உரிமையாளர்கள் தங்களது கனரக வாகனத்தில் அதிக பாரம் ஏற்றுதல், அதிக உயரத்தில் சரக்குகளை ஏற்றுதல், அதிகப்படியான ஒலி எழுப்பி அதி வேகமாக வாகனங்களை இயக்குதல் போன்ற தவறுகளை செய்யக்கூடாது என்று […]

மக்கள் நலனுக்கு கம்பம் காவல்துறையினர் செய்த காரியம், பொதுமக்கள் பாராட்டு

Admin

தேனி மாவட்டம்: தேனி மாவட்டம், கம்பம் நகர் அதனை சுற்றியுள்ள நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து கம்பம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தட்சிணாமூர்த்தி அவர்கள் தலைமையிலான போலீசார்களின் முயற்சியால் சாலை ஓரங்களில் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் விபத்து பகுதியை இரவு நேரங்களிலும் தெரிந்துகொண்டு விபத்தை தடுக்கும் விதமாக விபத்து பகுதி, DANGER என்று பிளக்ஸ் போர்டுகள் வைத்து அதில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த தேனி காவல்துறையினர்

Admin

தேனி : தேனி நகர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட அரண்மனைப்புதூர் விளக்கு பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த ₹ 45,000/- இருந்த பணப்பையை கொடுவிலார்பட்டி அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்த குருதேவன் (45) என்பவர் பணப்பையை எடுத்து தேனி நகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் பணப்பையில் இருந்த ஆதார் அட்டையின் முகவரியை தொடர்பு கொண்டபோது அது சீலையம்பட்டியைச் சேர்ந்த பிச்சைமணி (50) என்பவருக்கு சொந்தமான பணம் என்பது தெரியவந்தையடுத்து காவல் ஆய்வாளர் திரு. […]

மாநில அளவிளான திறனாய்வு போட்டியில் பதக்கம் வென்ற தேனி காவல்துறையினர்

Samson

தேனி மாவட்டம்:  தமிழ்நாடு காவல்துறை சார்பாக மாநில அளவில் நடந்த 2019-ம் ஆண்டு 63வது காவல்துறை திறனாய்வு போட்டிகளில் கலந்து கொண்ட தேனி மாவட்ட பெரியகுளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.முகமது யாகியா அவர்கள் விரல்ரேகை பிரிவிலும் தேவதானப்பட்டி காவல் நிலைய Gr-Iதிரு.சிங்கராஜ் அவர்கள் (Portrait) பிரிவிலும் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றனர். இவர்களை பாராட்டும் விதமாக *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன்* அவர்கள் நேரில் […]

கிராமங்களுக்குச் சென்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

Admin

தேனி : தேனி அனைத்து மகளிர் காவல் நிலைய *காவல் ஆய்வாளர் திருமதி. மங்கையர் திலகம்* அவர்கள் தலைமையில் SI திருமதி.சுமதி, WHC, திருமதி.முருகேஸ்வரி, WHC, திருமதி.கலைவாணி ஆகிய போலீசார்கள் T.கள்ளிப்பட்டி கிராம பகுதிக்குச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள், குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் தங்களுக்கும், தங்களை சார்ந்தவர்களுக்கும் ஏற்படும் பாலியல் ரீதியான தொந்தரவுகளை எவ்வாறு […]

நீட் தேர்வு முறைகேடு: உதித் சூர்யா குடும்பத்துடன் கைது!

Admin

சென்னையை சேர்ந்த மாணவர்  உதித்சூர்யா நீட் தேர்வு ஆள்மாறாட்டம் செய்த புகாரில் தேடப்பட்டு வந்த நிலையில், திருப்பதி மலையடிவாரத்தில் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டடார். உதித்சூர்யா, இவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், மாணவர் உதித்சூர்யா, தமக்கு முன் ஜாமீன் வழங்கும்படி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகினார். அந்த மனுவை விசாரித்த […]

பெண்ணை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுகொடுத்த தேனி மாவட்ட காவல்துறையினர்

Admin

தேனி: தேனி, தேவாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு சாந்தகுமார் (34) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரதிமாலா என்பவருக்கும் இடையே தகாத உறவு கருத்து வேறுபாடு காரணமாக கொலை செய்தது தொடர்பாக தேவாரம் காவல் நிலைய போலீசார் பிரிவு 302 IPCன் கீழ் வழக்குப்பதிவு செய்து சாந்தகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கானது தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில்,நேற்று 20.09.2019ம் […]

தேனியில் குற்ற செயல்களை தடுக்க முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள்

Admin

தேனி : தேனி மாவட்டம் , தேவாரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் குற்ற செயல்களை தடுக்கும் விதமாக, *காவல் ஆய்வாளர் திரு.ராமகிருஷ்ணன்* அவர்கள் தலைமையில் SI *திரு.இதிரீஸ்கான், SSI திரு.அய்யப்பன், HC திரு.ராஜசேகர்* ஆகியோர்களின் முயற்சியால்  தேவாரம் வர்த்தக சங்கத்தின் உதவியில்  வ.உ.சி. மைதானம்,  தெற்கு தெரு, வடக்கு தெரு, மாரியம்மன் கோவில் தெரு,  18வது வார்டு பகுதி, பேருந்து நிலையம் போன்ற முக்கிய இடங்களில் 24 CCTV கேமராக்கள் […]

Bitnami