“அச்சமில்லை அச்சமில்லை காவலன் செயலி இருக்க அச்சமில்லை” திண்டுக்கல் SP உறுதி

Admin

திண்டுக்கல் : “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்னும் பாரதியார் பாடலை உணர்த்தும் வகையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய 11.12.19 திண்டுக்கல் மாவட்டம்  M.V.M மகளிர் கலைக்கல்லூரியில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்கள் தமிழ்நாடு காவல் துறையால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ” KAVALAN SOS ” செயலியின் நன்மைகள் குறித்தும், செயலியை எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும் மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார்கள். […]

பாய்ஸ் கிளப்பில் இணைந்து பயன்பெற திண்டுக்கல் SP சக்திவேல் வலியுறுத்தல்

Admin

திண்டுக்கல் : திண்டுக்கல், நத்தத்தில் காவல் நிலையம் பின்புறம் பழுதடைந்து இருந்த கட்டிடம் நத்தம் காவல்துறையால் புதுப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பொது மக்களிடையே பேசியதாவது. பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும், நட்புறவு ஏற்படுத்தும் வகையில் பாய்ஸ் கிளப் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற்று நல்லுறவை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என கூறினார். இதில் ருரல் காவல் துணை கண்காணிப்பாளர் […]

திண்டுக்கல் காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம்கள், DSP -க்கள் துவக்கி வைப்பு

Admin

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் 07.12.19 சனிக்கிழமை நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமினை ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆனந்தராஜ் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். பழனி த.சி.கா 14 அணியில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமினை பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் காவலர்களுக்கு மனச்சோர்வை போக்கும் […]

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

Admin

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (எ) சுள்ளான் ரமேஷ் (22) இவர் அப்பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஏசு ராஜசேகர் அவர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. வேடசந்தூர் நல்லமனார்கோட்டையைச் சேர்ந்த மல்லீஸ் முருகன் (26) என்பவர் எரியோடு பகுதியில் ஒருவரை பெட்ரோல் ஊற்றி தீ […]

திண்டுக்கலில் கஞ்சா விற்பனை செய்தால்,குண்டர் சட்டம் பாயும், SP சக்திவேல் எச்சரிக்கை

Admin

திண்டுக்கல் : கல்லூரி மாணவர்களை போதை பழக்கத்திற்கு உட்படுத்திய கஞ்சா விற்பனையாறர்களை குண்டர்சட்டத்தின் கீழ் செய்யபடுவார்கள் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். திண்டுக்கல் பழனி சாலை தாலுகா காவல்நிலைய சரகம் அனுமந்தராயன் கோட்டை கிராம் சாமியார் பட்டி கிராமத்தில் சில கல்லூரிமாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தாக கிடைக்கப்பெற்ற தகவலின் படி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா.சக்திவேல் அவர்களின் […]

திண்டுக்கலில் சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்தி சென்ற நபர் கைது

Admin

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர மகளிர் காவல் நிலையம் சார்பாக திண்டுக்கல் நகர் பாரதிபுரம் பகுதியில் வசித்து வந்த உதயகுமார் 21 என்பவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்தி சென்றுள்ளார்.இது குறித்து சிறுமியின் தயார் திண்டுக்கல் அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.K.அமுதா அவர்கள் வழக்கு பதிவு செய்து உதயகுமார் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் […]

அறிவியல் சார்ந்த கண்காட்சியை துவக்கி வைத்த திண்டுக்கல் தாலுகா காவல் ஆய்வாளர் திரு.தெய்வம்

Admin

திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி சாலையில் அமைந்துள்ள கோலிகிராஸ் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளிகுழந்தைகளுக்காக நடைபெற்ற குழந்தைகளின் மேன்பாட்டிற்கான அவர்களின் அறிவினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு அறிவியல் மற்றும் கைவினை கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் நகர தாலுகா சிறப்பு ஆய்வாளர் திரு.தெய்வம் அவர்கள் தலைமையில் துவங்கப்பட்டு கண்காட்சியில் உள்ள அனைத்து விதமான குழந்தைகளின் செயல் முறை விளக்கத்யும் கேட்டு அறிந்து கொண்டார். உடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிஸ்டர்.டெல்மா […]

திண்டுக்கலில் சட்ட விரோதமாக மது விற்ற 6 பேர் கைது

Admin

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தின் சார்பாக திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள குள்ளனம்பட்டி மற்றும் தாலுகா காவல்நிலைம எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு.சுப்ரமணியன் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.சுந்தரம் அவர்களது தலைமையிலான நடந்த நகர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிரான மதுபானங்களை விற்ற 6 நபர்களான பொன்மாந்துறை மாயன் வயது 44, அனுமந்தராயன் கோட்டை பச்சையம்மாள் 65, சிறுமலை அண்ணாநகர் நாகராஜ் […]

காவலர் நிறைவாழ்வு பயிற்சி காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர்

Admin

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் பழனி மஹாலில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமின் நிறைவு நாளில் திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் அவர்கள் கலந்துகொண்டு காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கியும், மேலும் காவலர்கள் தங்கள் பணியை செம்மையாக செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் அறிவுரைகளை கூறினார்கள். நிகழ்ச்சியில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூன்று பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட போலீசார்

Admin

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  கடந்த மாதம் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.குமரேசன் அவர்கள் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். நெல்லூரில் ஒரு வீட்டில் 18 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த முத்துப்பாண்டி (30), சரவணன் (29) மற்றும் முத்துராஜ் (29) ஆகிய 3 பேரை 30.11.19 கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் மீது […]

error: Content is protected !!
Bitnami